News October 18, 2025
BREAKING: மதுரைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. காலை 62 அடியாக இருந்த அணை நீர்மட்டம் தற்போது 66 அடியை எட்டியுள்ளது. இதனால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 15, 2025
திருட்டு வழக்கில் 2 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை

சோழவந்தான் பகுதியில் 2020ல் நடந்த திருட்டு குற்றத்தில் கார்த்திக் என்ற சுண்டு கார்த்திக்(20), வீரமணி(20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். வாடிப்பட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், தீர்ப்பை நீதிபதி செல்லையா நேற்று வழங்கினார். அதில் கார்த்திக், வீரமணி ஆகிய இருவருக்கும்
தலா 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் தலா ரூ.
20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
News December 15, 2025
மதுரை: மகளிர் உரிமை தொகை வரலையா.? அரசு அறிவிப்பு

மதுரை மக்களே மகளிர் உரிமை தொகை ரூ.1000 வராதவங்க மேல்முறையீடுக்கு இத பண்ணுங்க.
1.இங்கு <
2.அடுத்து, SERVICES-ஐ தேர்ந்தெடுத்து, அதில் KMU-101 KMUT APPEAL பகுதிக்குள் செல்லவும்.
3. ஆதார் எண், ஆண்டு வருமானத்தை பதிவு செய்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்க.
தகவல்களுக்கு, உங்கள் பகுதி வட்டாச்சியர்/கோட்டாட்சியரை அணுகவும்.
தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News December 15, 2025
திருமங்கலம் கால்வாயில் தவறி விழுந்தவர் பலி

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள கொக்குளத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன் சௌந்தரபாண்டி (54). இவர், செக்கானூரணி பகுதியில் உள்ள திருமங்கலம் கால்வாயில் சனிக்கிழமை தவறி விழுந்தார்.அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்தார்.இதுகுறித்து செக்கானூரணி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


