News October 18, 2025
BREAKING: தேனிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. காலை 62 அடியாக இருந்த அணை நீர்மட்டம் தற்போது 66 அடியை எட்டியுள்ளது. இதனால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 15, 2025
தேனி: மகளிர் உரிமை தொகை வரலையா.? அரசு அறிவிப்பு

தேனி மக்களே மகளிர் உரிமை தொகை ரூ.1000 வராதவங்க மேல்முறையீடுக்கு இத பண்ணுங்க.
1.இங்கு <
2.அடுத்து, SERVICES-ஐ தேர்ந்தெடுத்து, அதில் KMU-101 KMUT APPEAL பகுதிக்குள் செல்லவும்.
3. ஆதார் எண், ஆண்டு வருமானத்தை பதிவு செய்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்க.
தகவல்களுக்கு, உங்கள் பகுதி வட்டாச்சியர்/கோட்டாட்சியரை அணுகவும்.
தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News December 15, 2025
தேனி: பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது!

சின்னமனூர் போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக எரசக்கநாயக்கனூர் பகுதியில் நேற்று (டிச.14) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் சின்னசாமி, பாண்டி, கார்த்திக், வேல்முருகன், மணிகண்டன் ஆகியோர் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்த பணம் மற்றும் சீட்டுக் கட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
News December 15, 2025
தேனியில் புத்தக திருவிழா கட்டுரை போட்டி

தேனியில் 4-ஆவது புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு, தேனி மாவட்டத்தின் தனித்துவமான சிறப்புகள் மற்றும் வரலாற்று குறிப்புகள் குறித்த 1 பக்க கட்டுரையினை சிறந்த முறையில் அனுப்பும் நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், தயார் செய்த கட்டுரையை tnibookfair2025@gmail.com என்ற மின்னஞ்சலில் டிச.18க்குள் அனுப்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.


