News November 19, 2025

BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

image

கடந்த 5 நாள்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று(நவ.19) தடாலடியாக உயர்வை கண்டுள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹100 உயர்ந்து ₹11,500-க்கும், சவரனுக்கு ₹800 உயர்ந்து ₹92,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை மற்றும் இந்திய பங்குச்சந்தைகளில் தொடர் சரிவு காரணமாக தங்கம் விலை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.

Similar News

News January 21, 2026

ரவீந்திரநாத் தாகூர் பொன்மொழிகள்

image

*நட்பின் ஆழம் பழக்கத்தின் அளவைப் பொறுத்தது அல்ல. *விடியற்காலை இன்னும் இருட்டாக இருக்கும்போதும் ஒளியை உணரும் பறவைதான் நம்பிக்கை. *முள் எங்கே இருக்கிறது என்று தெரிந்தால் மட்டுமே அதை எடுக்க முடியும். *காதல் ஒரு முடிவற்ற மர்மம், ஏனெனில் அதை விளக்கக்கூடிய நியாயமான காரணம் எதுவும் இல்லை. *அளவுக்கு மீறிய ஆசைகளை கைவிடுவதே ஆகச்சிறந்த செல்வமாகும்.

News January 21, 2026

மே மாதம் கடலுக்குள் செல்லும் மத்ஸ்யா-6000

image

இந்தியா தனது சமுத்ரயான் ஆழ்ந்த கடல் ஆராய்ச்சி சமுத்திரயான் திட்டத்தின் ஒரு பகுதியாக, நீர்மூழ்கிக் கப்பலான ‘மத்ஸ்யா-6000’ மே மாதத்தில் முதல்முறையாக கடலுக்குள் பயணிக்க உள்ளது. டீப் ஓஷன் மிஷன் (DOM) கீழ் கட்டப்பட்ட இந்த நீர்மூழ்கிக் கப்பல், முதலில் 500 மீட்டர் ஆழம் வரை செல்லும். இந்த சோதனை வெற்றி பெற்றால், பின்னர் 6,000 மீட்டர் ஆழத்திற்கான முழுமையான மனிதர் பயணம் மேற்கொள்ளப்படும்.

News January 21, 2026

NASA உங்கள் பெயரை சந்திரனுக்கு அனுப்புகிறது

image

Artemis II பயணத்துக்காக ஒரு சிறப்பு திட்டத்தை NASA தொடங்கியுள்ளது. இதில் உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்களது பெயரை பதிவுசெய்யலாம். பதிவுசெய்த பெயர்கள் டிஜிட்டல் மெமரி கார்டில் சேமிக்கப்பட்டு, ஆர்டெமிஸ் II பயணத்தில் சந்திரனுக்கு அனுப்பப்படும். ஜனவரி 21-ம் தேதியே பதிவு செய்ய கடைசி நாள். பதிவு செய்த பின், NASA உங்களுக்கு ஒரு டிஜிட்டல் போர்டிங் பாஸ் தரும். இது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்.

error: Content is protected !!