News August 5, 2024

BREAKING கோவைக்கு புதிய மேயர் இவர்தான்!

image

மேயர் பதவியை கல்பனா ராஜினாமா செய்த நிலையில், நாளை கோவை மாநகர மேயர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி (29வது வார்டு கவுன்சிலர்) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் போட்டியின்றி ரங்கநாயகி மேயராக தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்புள்ளது.

Similar News

News January 16, 2026

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (16.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 16, 2026

கோவை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <>tnuwwb.tn.gov.in <<>>என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 16, 2026

பரளிக்காடு சுற்றுலா! உடனே APPLY பண்ணுங்க!

image

மேற்குதொடர்ச்சி மலையின் அழகையும், பில்லூர் அணை, வனப்பகுதியின் முக்கியத்துவத்தையும் அறிந்து கொள்ளும் வகையில், வார இறுதி நாட்களில் பரளிக்காடு சூழல் சுற்றுலா வனத்துறையினரால் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. இங்கு செல்ல முன்பதிவு அவசியம். செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் <>இந்த லிங்க்கில்<<>> இருக்கும் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். பெரியவர்களுக்கு ரூ.600, குழந்தைகளுக்கு ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

error: Content is protected !!