News November 25, 2025

BREAKING: கூட்டணி முடிவை அறிவித்தார் ராமதாஸ்

image

2026 தேர்தல் கூட்டணி குறித்து டிச.30-ல் நடக்கும் பொதுக்குழுவில் அறிவிக்கப்படும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மகள் காந்திமதி உள்பட முக்கிய நிர்வாகிகளை அழைத்து தைலாபுரத்தில் அவர் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஏற்கெனவே பாமகவை ஒன்றிணைத்து கூட்டணியில் சேர்க்க பாஜக முற்படுவதாக கூறப்படுகிறது. எனவே, ராமதாஸும் NDA கூட்டணியையே தேர்ந்தெடுப்பார் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

Similar News

News January 13, 2026

‘பராசக்தி’ படக்குழு வெற்றிக் கொண்டாட்டம்

image

பொங்கலை முன்னிட்டு ஜன.10-ல் ரிலீசான ‘பராசக்தி’ படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 2 நாள்களில் உலகம் முழுவதும் ₹51 கோடி வசூல் செய்ததாக அபிஷியல் அறிவிப்பு வெளியான நிலையில், படக்குழுவினர் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சுதா கொங்கரா, சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்த தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். நீங்க பராசக்தி பார்த்துட்டீங்களா?

News January 13, 2026

சாம்சங்கை பின்னுக்கு தள்ளிய ஆப்பிள்

image

2025-ல் ஆப்பிள் நிறுவனம் நம்பர் ஒன் ஸ்மார்ட்போன் பிராண்டாக உருவெடுத்துள்ளது. ஐபோன் 17-ன் வெற்றி மற்றும் 16-க்கு ஏற்பட்ட தேவை காரணமாக விற்பனையில் 10% வளர்ச்சியுடன், கடந்த 14 ஆண்டுகளில் முதல்முறையாக முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. சாம்சங் 2-வது இடத்தில் உள்ளது. ஸ்மார்ட்போன் சந்தையில், தற்போது ​​ஆப்பிள் 20%, சாம்சங் 19%, சியோமி 13%, விவோ 8%, ஒப்போ 8% மற்றும் பிற பிராண்டுகள் 32% பங்கைக் கொண்டுள்ளன.

News January 13, 2026

ராசி பலன்கள் (13.01.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!