News October 1, 2025

BREAKING: கரூர் துயரம் செந்தில் பாலாஜி விளக்கம்!

image

கரூர் எம்எல்ஏ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி இன்று பத்திரிக்கையாளர்களை இன்று சந்தித்தார். விஜய் பிரச்சார கூட்டத்தில் நடந்த துயர சம்பவத்தில், தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டது. 41 பேர் பலியான விவகாரத்தில், பிரச்சார கூட்டத்திற்கு தவெக தலைவர் விஜய் 4 மணிக்கு வந்திருந்ததால், கூட இந்த துயர சம்பவம் நடந்திருக்காது. கூட்டத்தை பொறுத்து இடத்தை தேர்வு செய்வது அந்த கட்சிகளின் பணி என செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

Similar News

News December 13, 2025

கரூர்: வாக்கு இயந்திரங்களை பார்வையிட்ட ஆட்சியர்!

image

கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், இ.ஆ.ப.,தலைமையில் இன்று (13.12.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில், முதற்கட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி பார்க்கும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

News December 13, 2025

வெங்கமேடு பகுதியில் தூக்கு போட்டு பெண் தற்கொலை!

image

கரூர், வெங்கமேடு தங்கநகர் பகுதியில், சுசிலா(60), என்பவர் சில மாதங்களுக்கு முன்பாக கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மேலும் நேற்று மன விரக்தியில் இருந்த சுசிலா தனது வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்து வெங்கமேடு போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

News December 13, 2025

கரூர்: பண்ணை அமைக்க ஆசையா? ரூ.50 லட்சம் மானியம்!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் – ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <>nlm.udyamimitra.in<<>> என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!