News November 25, 2025
BREAKING: கனமழை.. அனைத்து மாவட்டங்களுக்கும் உத்தரவு

பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் நீர்நிலைகளை கண்காணிக்க நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். ஏரிகள், அணைகள் உள்ளிட்டவற்றின் நீர் இருப்பை முழு கொள்ளளவில் இருந்து 20% வரை குறைக்கவும், வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டால் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News January 12, 2026
அதிமுக கூட்டணியில் அமமுக இணைகிறதா?

அதிமுக கூட்டணியில் இன்னும் ஓரிரு நாள்களில் புதிய கட்சிகள் இணையும் என EPS தெரிவித்திருந்தார். இந்நிலையில், கூட்டணியில் டிடிவி தினகரனை சேர்க்க பாஜக தலைமையிடம் EPS சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சோளிங்கர், பாபநாசம், ஆண்டிப்பட்டி, சாத்தூர், தாம்பரம் உள்ளிட்ட 7 தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ளதாகவும், இதுகுறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
News January 12, 2026
அழகின் ஒளியாக ஆஷிகா ரங்கநாத்

‘சர்தார் 2’ திரைப்படத்தில் நடிக்கும் ஆஷிகா ரங்கநாத், பட்டொளி வீசும் தனது லேட்டஸ்ட் போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதில், ஊசி குத்தும் பார்வையாலும், சர்க்கரை தடவிய சிரிப்பாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார். கண் இமை உறைந்துபோக மனதில் அலையடிக்கும் ஓவியமாய் ஒளிர்கிறார். அவரது அழகான போட்டோஸ் உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
News January 12, 2026
ஒன்றாக டெல்லி செல்லும் நயினார், அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை ஒன்றாக நாளை மாலை டெல்லி செல்கின்றனர். ஜன.14-ம் தேதி அமைச்சர் எல்.முருகன் வீட்டில் பிரதமர் மோடியுடன் பொங்கல் விழாவில் இருவரும் பங்கேற்கவுள்ளனர். அப்போது, தற்போதைய தமிழக அரசியல் சூழல், கூட்டணி, தொகுதிப்பங்கீட்டை இறுதி செய்வது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


