News November 19, 2025
BREAKING: உலகம் முழுவதும் X தளம் முடங்கியது

பிரபல சோஷியல் மீடியாவான X தளம் உலகம் முழுவதும் முடங்கியதால் பயனர்கள் அவதியடைந்துள்ளனர். மாலை 5 மணிக்கு மேல் X தளத்தை சரியாக பயன்படுத்த முடியவில்லை என 10,000-க்கும் மேற்பட்டோர் இணையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். சாட் என்ற புதிய வசதி X-ல் இன்று அறிமுகப்படுத்திய நிலையில், அந்த செயலி முடங்கியுள்ளது. உங்களால் X தளத்தை பயன்படுத்த முடிகிறதா என கமெண்டில் பதிவிடுங்கள்.
Similar News
News December 6, 2025
‘LORD’ வார்த்தையை நீக்குக: பாஜக MP

பாடப்புத்தகங்களில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பெயர்களில் உள்ள LORD வார்த்தையை நீக்க வேண்டும் என பாஜக எம்பி சுஜீத் குமார் வலியுறுத்தியுள்ளார். ராஜ்ய சபாவில் பேசிய அவர், பாடப்புத்தகங்கள், அரசு ஆவணங்கள், அரசு தளங்களில் இன்னுமும் LORD வார்த்தை பயன்படுத்துவதாக குறிப்பிட்டார். சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் அதை நாம் பின்பற்றுவது, ‘காலனித்துவ மனநிலையில்’ நீடிப்பதை உணர்த்துவதாக கூறியுள்ளார்.
News December 6, 2025
புடின் ருசித்த இந்திய உணவுகள்

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்த அதிபர் புடின், பல இந்திய உணவுகளை ருசித்து சாப்பிட்டுள்ளார். நேற்று ஜனாதிபதி இல்லத்தில் அவருக்கு சிறப்பு விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது. மோமோஸ், பனீர் ரோல், உருளைக்கிழங்கு தந்தூரி, முருங்கை சூப், பாலக் கீரை, கஷ்மீர் ஸ்டைல் வால்நட் சட்னி, பருப்பு குழம்பு, நாண் ரொட்டி, பாதாம் அல்வா, புலாவ், பிஸ்தா குல்ஃபி என இந்திய சைவ உணவுகள் வழங்கப்பட்டுள்ளன.
News December 6, 2025
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பொன்மொழிகள்!

*மற்றவர்களைவிட திறமையாக விளையாட வேண்டுமானால் முதலில் விளையாட்டின் விதிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் *வெற்றிபெற்ற மனிதனாக ஆவதற்கு முயற்சி செய்யாதீர்கள்! மாறாக, மதிப்புமிக்க மனிதனாக மாற முயலுங்கள் *அமைதி என்பது ஆழமான புரிதலினால் ஏற்படுவது, அதை ஒருபோதும் அடக்குமுறையால் ஏற்படுத்திவிட முடியாது *மற்றவர்களுக்காக வாழும் வாழ்க்கையே, ஒரு பயனுள்ள வாழ்க்கையாகிறது


