News November 19, 2025
BREAKING: அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்

அன்வர் ராஜா, மருது அழகுராஜ், மனோஜ் பாண்டியன் என அடுத்தடுத்து அதிமுக மற்றும் OPS அணியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். இந்நிலையில், நேற்று வரை OPS கூடவே இருந்த விருதுநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ் கதிரவன் தனது ஆதரவாளர்களுடன் அமைச்சர் KKSSR முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதேபோல், திருவள்ளூர் அதிமுக கிழக்கு மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் உள்ளிட்டோரும் திமுகவில் ஐக்கியமாகியுள்ளனர்.
Similar News
News January 24, 2026
புதுவை: ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் கிடைக்கும்!

புதுவை மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். குறிப்பாக, குழந்தைகளின் பெற்றோருக்கு 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும்.
News January 24, 2026
FLASH: சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு

கடந்த 20-ம் தேதி தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. 5 நாள்கள் நடைபெற்ற கூட்டத்தில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம், மத்திய அரசின் VB–G RAM G மசோதாவுக்கு எதிராக தனித் தீர்மானம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏப்ரலில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால் பிப். இறுதி (அ) மார்ச் முதல் வாரத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கலாக வாய்ப்புள்ளது.
News January 24, 2026
பேரவையில் Absent.. கட்சியில் Present ஆன EPS

சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், அதிமுக, பாஜக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. இந்நிலையில், 2026 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் கட்சி தலைமை அலுவலகத்தில் வைத்து EPS நேர்காணல் நடத்தி வருகிறார். தூத்துக்குடி, தி.மலை, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் அவர் நேர்காணல் நடத்தி வருகிறார்.


