News November 19, 2025
BREAKING: அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்

அன்வர் ராஜா, மருது அழகுராஜ், மனோஜ் பாண்டியன் என அடுத்தடுத்து அதிமுக மற்றும் OPS அணியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். இந்நிலையில், நேற்று வரை OPS கூடவே இருந்த விருதுநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ் கதிரவன் தனது ஆதரவாளர்களுடன் அமைச்சர் KKSSR முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதேபோல், திருவள்ளூர் அதிமுக கிழக்கு மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் உள்ளிட்டோரும் திமுகவில் ஐக்கியமாகியுள்ளனர்.
Similar News
News January 15, 2026
இந்தியா இதை நிரூபித்து காட்டியுள்ளது: PM மோடி

நமது நாடு, பன்முகத்தன்மையை ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலமாக மாற்றியுள்ளதாக PM மோடி கூறியுள்ளார். காமன்வெல்த் மாநாட்டில் பேசிய அவர், இந்தியா சுதந்திரம் பெற்றபோது, பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில் ஜனநாயகம் நிலைத்திருக்க முடியுமா என்ற சந்தேகம் சர்வதேச அளவில் எழுந்ததாக குறிப்பிட்டார். ஆனால், அந்த அச்சங்களை இந்தியா இன்று தவறு என்று நிரூபித்து காட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News January 15, 2026
பொங்கல் நாள்: தங்கம், வெள்ளி.. விலை ₹3,000 மாற்றம்

பொங்கல் நாளான இன்றும் கூட <<18862348>>தங்கத்தை போலவே<<>> வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனையில் 1 கிராம் ₹3 உயர்ந்து ₹310-க்கு விற்பனையாகிறது. மொத்த விற்பனையில் பார் வெள்ளி 1 கிலோவுக்கு ₹3,000 உயர்ந்து ₹3,10,000-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையைப் பொறுத்தவரையில் கடந்த 15 நாள்களில் மட்டும் கிலோவுக்கு ₹54,000 அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.
News January 15, 2026
‘தனுஷ்54’ படத்தின் பெயர் இதுதான்!

’போர் தொழில்’ விக்னேஷ் ராஜா இயக்கத்தில், தனுஷ் நடித்து முடித்துள்ள படத்திற்கு ‘கர’ என பெயரிடப்பட்டுள்ளது. வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். பிரமாண்ட பொருள் செலவில் எமோஷனல் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்த படம் கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என படக்குழு தெரிவித்துள்ளது.


