News September 29, 2025

BREAKING:கிருஷ்ணகிரி இரட்டை கொலை… 3 பேர் கைது

image

கிருஷ்ணகிரி அருகே பாஞ்சாலியூரில் கடந்த 26ஆம் தேதி நிகழ்ந்த தாய், மகள் இரட்டை கொலை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட எல்லம்மாளிடம் ரூ.10,000 கடன் வாங்கி ரூ.3,000 செலுத்திய நிலையில், மீதி பணத்தை கேட்டதால் கொலை செய்துள்ளனர். இதுதொடர்பாக நவீன்குமார், சத்தியரசு மற்றும் சிறுவனை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 10 சவரன் நகையை மீட்டுள்ளனர்.

Similar News

News November 10, 2025

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (09.11.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்

News November 9, 2025

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவி

image

தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றும் ரஞ்சித்குமாரின் மகள் பத்மஸ்ரீ (17), கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–2 படித்து வருகிறார். 7 வயதிலிருந்து சிலம்பம் கற்று வரும் இவர், மாநில, தேசிய போட்டிகளில் பல தங்க, வெள்ளி பதக்கங்கள் வென்றுள்ளார். சமீபத்தில் நேபாளில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்ப போட்டியில் தங்கம் வென்று, ஆசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்து பெற்றார்.

News November 9, 2025

கிருஷ்ணகிரி: பஸ்ல போறவங்க இத நோட் பண்ணுங்க

image

பேருந்தில் டிக்கெட் எடுக்கும் போது மீதி சில்லரை பின்னர் தருவதாக கண்டக்டர் சொல்லி விட்டால், சில்லரை வாங்கும் வரை நிம்மதி இருக்காது. சில சமயம் மறந்து சில்லறை வாங்காமல் இறங்கியிருப்போம். சில்லறை வாங்காமல் இறங்கி விட்டால் 1800 599 1500 எண்ணை தொடர்பு கொண்டு, பயண சீட்டு விபரங்களை தெரிவித்து மீதி சில்லறையை G-PAY மூலம் பெறலாம். *பஸ்ல போகும் போது யூஸ் ஆகும் ஷேர் பண்ணுக*

error: Content is protected !!