News July 15, 2024
காலை உணவு திட்டம் 3,995 பள்ளிகளுக்கு நீட்டிப்பு

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 3,995 பள்ளிகளில் இன்று தொடங்கப்பட உள்ளது. காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் 2,23,556 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் ஏற்கெனவே செயல்படுத்தப்படும் சூழலில், தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 8, 2025
செயற்குழு தீர்மானங்கள் செல்லாது: அன்புமணி

ராமதாஸ் தலைமையிலான செயற்குழு தீர்மானங்கள் செல்லாது என அன்புமணி தலைமையிலான நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் திமுக அரசை கண்டித்து ஜூலை 20-ல் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பாமகவின் செயல்பாடுகள் குறித்த அனைத்து அதிகாரங்களும் அன்புமணிக்கு மட்டுமே உண்டு எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
News July 8, 2025
திமுக 200+ தொகுதிகளில் வெல்ல வாய்ப்பில்லை: இபிஎஸ்

200+ தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்லும் என ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார் என இபிஎஸ் விமர்சனம் செய்துள்ளார். கோவையில் 2வது நாளாக பரப்புரை மேற்கொண்ட அவர், தாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் திமுகவிற்கு என்னவென்று கேள்வி எழுப்பினார். திமுக கூட்டணியை மட்டுமே நம்பி இருப்பதாக குறிப்பிட்ட அவர், அதிமுக மக்களை நம்பி இருப்பதாகத் தெரிவித்தார். அதிமுக கூட்டணியில் பிரச்னை இல்லை என்றும் இபிஎஸ் குறிப்பிட்டார்.
News July 8, 2025
அஜித் குமார் மரணம்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு

அஜித் குமார் லாக்-அப் டெத் வழக்குடன் நிகிதாவின் நகை காணாமல்போன வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், அஜித் குமார் கொலை வழக்கின் விசாரணை அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 20-ம் தேதிக்குள் முடித்து இறுதி அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், திடீர் திருப்பமாக இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.