News June 19, 2024

41 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

சென்னை, கோவை உள்பட நாடு முழுவதும் 41 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த விமான நிலையங்களின் இயக்குனர்களுக்கு நேற்று exhumedyou888@gmail.com என்ற மின்னஞ்சலில் இருந்து மெயில் வந்தது. அதில் விமான நிலையங்களிலும் மறைத்து வைக்கப்பட்ட குண்டு வெடித்து சிதறும் எனக் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து சோதனை நடத்தியதில் அது வதந்தி எனத் தெரிய வந்தது.

Similar News

News January 25, 2026

இன்று தேசிய சுற்றுலா தினம்!

image

ஊர் சுற்றிப் பார்க்க யாருக்கு பிடிக்காது! இந்தியாவின் அழகை உலகிற்கு சொல்லும் விழா என இன்றைய நாளை இன்றை குறிப்பிடலாம். ‘அதிதி தேவோ பவ’ என்ற பண்பாட்டை நினைவூட்டும் விதமாகவும், சுற்றுலாவின் மகத்துவத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஜனவரி 25-ல், ‘தேசிய சுற்றுலா தினம்’ கொண்டாடப்படுகிறது. ‘உள்ளடக்கிய வளர்ச்சிக்கான சுற்றுலா’ என்பதே இந்த ஆண்டின் கருப்பொருள். உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம் எது?

News January 25, 2026

FLASH: திமுகவில் இணைந்த அதிமுக Ex MLA.. EPS அப்செட்

image

அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் சேலத்தில், அதிமுக Ex MLA மாதேஸ்வரன், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்துள்ளார். அவருடன் சேலம் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் பலர் ராஜ்யசபா MP சிவலிங்கம் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். ஆத்தூர் தொகுதியில் 2011 – 2016 வரை MLA ஆக இருந்த மாதேஸ்வரன் திடீரென திமுகவில் இணைந்தது EPS தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.

News January 25, 2026

3 தமிழக போலீசாருக்கு குடியரசு தலைவர் பதக்கம்

image

குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தை சேர்ந்த 3 போலீஸ் அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிறப்புமிக்க சேவைக்கான குடியரசு தலைவர் பதக்கத்தை மகேஸ்வரி IG, குமரவேலு DSP, அன்வர் பாஷா DCP ஆகியோர் பெறவுள்ளனர். இதேபோல, தேவராஜன் DSP, கமாண்டன்ட் மணிவர்மன் உள்ளிட்ட 21 தமிழக போலீஸ் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் தகைசால் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!