News August 22, 2024
ஆட்சிக்கு அமைப்பதே பாஜகவின் இறுதி இலக்கு

தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வருவது தான் பாஜகவின் உச்சபட்ச வளர்ச்சி என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். வெற்றியை முத்தமிடும் அளவிற்கு பாஜக மக்களை நெருங்கிவிட்டது. தீவிரமாக பணியாற்றினால், 2026இல் வெற்றி பெற்று உறுதி என நம்பிக்கை தெரிவித்த அவர், யார் எதிராக வேலை செய்தாலும் பாஜகவின் வளர்ச்சியை அணை போட்டு தடுக்க முடியாது எனக் கூறியுள்ளார்.
Similar News
News November 8, 2025
தஞ்சை பல்கலை.,யில் ஆந்திர மாணவன் விபரீத முடிவு!

தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா பல்கலை.,யில் ஆந்திராவை சேர்ந்த பி.டெக் மாணவன் அபினவ், 4-வது மாடியிலிருந்து குதித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில், ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகிறார். முதல்கட்ட விசாரணையில், வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தியதை பேராசிரியர் கண்டித்ததால், அபினவ் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
News November 8, 2025
நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

SIR விவகாரம் தொடர்பாக CM ஸ்டாலின் தலைமையில் நாளை(நவ.9) திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. காலை 10 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் MP-க்கள், MLA-க்களும் பங்கேற்க வேண்டும் என துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார். ஏற்கெனவே, SIR நடவடிக்கைகளுக்கு எதிராக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் வரும் 11-ம் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 8, 2025
மாதம் ₹10 லட்சம் கேட்கும் ஷமியின் மனைவி

சமீபமாக விவாகரத்து பெறும்போது சிலர் கேட்கும் ஜீவனாம்ச தொகை பல கேள்விகளை எழுப்பி வருகிறது. அப்படி நெட்டிசன்களின் கேள்விகளில் சிக்கியுள்ளார் ஷமியின் பிரிந்த மனைவி ஹசின் ஜஹான். அவர், ஷமி தனக்கு வழங்கும் ₹4 லட்சம் ஜீவனாம்சம் போதாது எனவும், ₹10 லட்சம் வேண்டும் என்றும் கேட்டு சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளார். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் இணையத்தில் வாதம் நடந்து வரும் நிலையில், உங்கள் கருத்து என்ன?


