News May 15, 2024
பாஜக வேட்பாளருக்கு ₹313 கோடி சொத்து

ஒடிஷாவில் சட்டசபை தேர்தல் 4 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது. அதில், முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக நிர்வாகியுமான திலீப் ராய் போட்டியிடுகிறார். அவரது சொத்து மதிப்பு மொத்தம் ₹313 கோடி என்று பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
Similar News
News December 15, 2025
குளிர்கால ஆரோக்கியத்துக்கு இது முக்கியம் மக்களே!

வெயில் காலத்தை விட குளிர்காலத்தில் நாம் நோய் தொற்றால் அதிகம் பாதிக்கப்படுவது வழக்கம். இதனால் ஆரஞ்சு, நெல்லிக்காய், திராட்சை உள்ளிட்ட வைட்டமின் C நிறைந்த உணவுகளை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். குளிர்காலத்தில் நீராவி குளியல் எடுப்பது, வியர்வையை வெளியேற்றவும், தசைகளை தளர செய்யவும் உதவுமாம். அடிக்கடி நோய் பாதிப்பு ஏற்படும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News December 15, 2025
என்ஜின் இல்லாத கார் அதிமுக: DCM உதயநிதி ஸ்டாலின்

பழைய அடிமைகளுடன் புதிய அடிமைகளை சேர்த்துக்கொண்டு தமிழ்நாட்டிற்கு நுழைய பாஜக முயல்கிறதாக உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார். தி.மலை இளைஞரணி மாநாட்டில் பேசிய அவர், என்ஜின் இல்லாத காரான அதிமுகவை, பாஜக என்னும் லாரி கட்டி இழுக்கிறதாகவும் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என பேசும் EPS, முதலில் அதிமுகவை காப்பாற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 15, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: செங்கோன்மை ▶குறள் எண்: 550
▶குறள்:
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.
▶பொருள்: கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசு தண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும்.


