News March 21, 2024
BIG BREAKING: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு ஏப்.12ஆம் தேதியுடன் நிறைவு பெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து, ஏப்.13ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை தொடங்க உள்ளது. தமிழகத்தில் ஏப்.19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பெரும்பாலான பள்ளிகளில் வாக்குப்பதிவு நடைபெறுவதால் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தி முடிக்கப்படுகின்றன.
Similar News
News February 7, 2026
புஞ்சைபுளியம்பட்டி: இளம் பெண் தற்கொலை

புஞ்சைபுளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த 19-வயது இளம் பெண்ணின் பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனம்உடைந்த இளம் பெண், வீட்டின் பின்புறம் பயன்படுத்தப்படாத நிலையில் இருந்த அங்கன்வாடி கட்டிடத்திற்கு உள்ளே சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சென்ற போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக GH-க்கு அனுப்பி வைத்தனர்.
News February 7, 2026
மாரடைப்பு ஆபத்தை தடுக்கும் கொடுவா மீன்!

20 முதல் 60 வரை என பலருக்கும் சர்வசாதாரணமாக ஹார்ட் அட்டாக் வருகிறது. இதனை தடுக்க கொடுவா வகை மீன்களை சாப்பிடலாம் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த மீன்களில் அதிகமாக ஒமேகா 3, புரதம், வைட்டமின் D, B12, செலினியம் இருப்பதால் இதய பிரச்னைகள் வரும் அபாயம் குறைகிறதாம். எனவே Red Meat-க்கு பதிலாக இவ்வகை மீன்களை உண்ணலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். கண்டிப்பா SHARE பண்ணுங்க.
News February 7, 2026
அப்பா இஞ்சின் தான் டப்பா இஞ்சின்: தமிழிசை

திமுகவுக்கு ஜீரோவுக்கு கீழே மார்க் இருந்தால் தரலாம் என தமிழிசை கூறியுள்ளார். தங்களை டப்பா இஞ்சின் என கூறுவதற்கு பதிலளித்த அவர், அப்பா இஞ்சின்தான் டப்பா அரசாங்கமாக இருக்கிறது என கூறியுள்ளார். மேலும், பேட்டரியே இல்லாத எஞ்சின் காங்கிரஸ்தான் எனவும், வெற்றியே பெறாத காங்கிரஸ், வீக்கான பேட்டரி கொண்ட டார்ச் லைட்டையெல்லாம் வைத்துக்கொண்டு இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் எனவும் கிண்டல் செய்திருக்கிறார்.


