News August 19, 2024

Cyber Pornography கும்பலிடம் எச்சரிக்கையாக இருங்கள்!

image

மருத்துவர்கள், IT பொறியியலாளர்களை குறிவைத்து, டார்க் வெப் டிஜிட்டல் பண மோசடி கும்பல்கள் களமிறங்கி இருப்பதாக தெரிகிறது. தொழில் பயன்பாட்டு மின்னஞ்சல், வாட்ஸ் ஆப்பில் லிங்க் வழியே ஆபாசப்படங்களை அனுப்புகின்றனர். பின்னர், சைபர் போலீசார் எனக் கூறி, ‘டாப் சீக்ரெட்’ போலி கைது ஆணைகளை அனுப்பி, அபராதம் என்ற பெயரில் முகந்தெரியா கும்பல் பணம் வசூலிக்கிறது. எனவே எச்சரிக்கையாக இருங்கள். >Share It

Similar News

News January 22, 2026

நான் திமுகவிலா.. வெல்லமண்டி நடராஜன்

image

வைத்திலிங்கம் நேற்று திமுகவில் இணைந்தார். அவருடன் வெல்லமண்டி நடராஜனும் திமுகவில் இணையப்போவதாக தகவல் வெளியாகிய நிலையில், அவர் இணையவில்லை. இதுகுறித்து பேசிய அவர், நான் திருச்சியில் தான் இருக்கிறேன். எனக்கு திமுகவில் சேரும் எண்ணம் இல்லை. OPS உடன் தொடர்ந்து பயணிப்பேன் என்று அவரது ஆதரவு யாருக்கு என்பதை தெளிவுப்படுத்தினார்.

News January 22, 2026

தமிழகத்தில் சிக்குன்குனியா பரவல் அதிகரிப்பு

image

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிக்குன்குனியா பரவல் அதிகரித்துள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்த ஹாஸ்பிடல்களுக்கு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. காய்ச்சல், இருமல், உடல்வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள ஹாஸ்பிடலுக்கு செல்லுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொசு உற்பத்தியை தடுக்க வீடுகளில் நீர் தேங்காமல் தடுப்பது அவசியம்.

News January 22, 2026

சிறு, குறு தொழில்களுக்கு கடன் வழங்க நடவடிக்கை

image

மத்திய அரசு, இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கிக்கு (SIDBI) ₹5,000 கோடி பங்கு மூலதன ஆதரவை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இது, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME) கடன் வழங்குவதை மேம்படுத்தவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவும். இதனால், சொந்த தொழில் தொடங்குபவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!