News August 5, 2024
கறிவேப்பிலை சாற்றின் நன்மைகள்

கறிவேப்பிலை ஜூஸில், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கும் தன்மை உள்ளதாக, மருத்துவர்கள் கூறுகின்றனர். தேங்கிய சளியைக் கரைக்கும் வல்லமையும், இரத்தத்தில் நச்சுக்களை நீக்கி சுத்தப்படுத்துவதோடு, இரத்த ஓட்டத்தை சீராக்கவும் பயன்படுகிறது. முக்கியமாக கறிவேப்பிலை சாற்றை தினமும் ஒரு டம்ளர் வீதம் 10 நாள்கள் தொடர்ந்து குடித்து வந்தால், முடி உதிர்தல் குறைந்து, அடர்த்தியாக மாறுவதை நாமே பார்க்கலாம்.
Similar News
News January 24, 2026
தமிழகத்தில் 2,016 சாலை விபத்துகள்.. மிக கவனம்

தமிழகத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் நோக்கில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலத்தில் நாள்தோறும் சாலை விபத்துகளில் 48 பேர் உயிரிழப்பதாக தாம்பரம் போக்குவரத்து துணை ஆணையர் தெரிவித்துள்ளார். இதன்படி, ஆண்டுக்கு சுமார் 17,000 பேர் உயிரிழக்கின்றனர். கடந்த ஜூன் மாத விபத்துகள் தொடர்பான மத்திய அரசு அறிக்கையின்படி, அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 2,016 விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
News January 24, 2026
தமிழகத்தில் சாதி மதச் சண்டைகள் இல்லை: CM

அதிமுக ஆட்சியை ஒப்பிடுகையில் திமுக ஆட்சியில் குற்றச் செயல்கள் குறைந்துள்ளது என புள்ளி விவரங்கள் கூறுவதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பேரவையில் கவர்னர் உரைக்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் சாதி, மதச் சண்டை, கும்பல் வன்முறை கிடையாது என்றார். எனவே கவர்னரின் பார்வை தான் பழுதுபட்டுள்ளது என காட்டமாக கூறினார். மேலும், கவர்னர் பதவியை அவரே (RN ரவி) அவமானப்படுத்துவதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
News January 24, 2026
BREAKING: ஓபிஎஸ் – அமைச்சர் சேகர் பாபு திடீர் சந்திப்பு

சபாநாயகர் அறையில் OPS-ஐ அமைச்சர் சேகர் பாபு சந்தித்து 15 நிமிடங்கள் பேசியுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் தேர்தலில் தங்களது நிலைப்பாடு என்ன என்பது குறித்து OPS-யிடம் சேகர் பாபு கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. OPS அணியில் இருந்து மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் அடுத்தடுத்து திமுகவில் ஐக்கியமான நிலையில், இந்த சந்திப்பானது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


