News November 14, 2025

Beef வைத்திருந்ததற்காக ஆயுள் தண்டனை!

image

நாட்டிலேயே முதல் முறையாக, குஜராத்தில், இறைச்சிக்காக மாடுகளை கொன்றதாக 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து குஜராத் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023-ல் அம்ரேலியில் சட்டவிரோதமாக மாடுகளை கொன்று 40 கிலோ இறைச்சியை வைத்திருந்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். குஜராத் விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், 3 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா 6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 11, 2025

Ro-Ko கான்ட்ராக்டை மாற்றுகிறதா BCCI?

image

Ro-Ko ஆகியோரின் சம்பள ஒப்பந்தத்தில் விரைவில் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் தற்போது A+ பிரிவில் (ஆண்டுக்கு ₹7 கோடி) உள்ளனர். ஆனால், இந்தியாவுக்காக 3 வகை கிரிக்கெட்டிலும் விளையாடுபவருக்கே இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, வரும் 22-ம் தேதி BCCI-ன் வருடாந்தர பொதுக்குழு கூட்டத்தில், இவர்களின் கான்ட்ராக்ட் மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.

News December 11, 2025

BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியுள்ளது

image

ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹160 உயர்ந்து ₹96,400-க்கும், கிராமுக்கு ₹20 உயர்ந்து ₹12,050-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, நேற்று ₹240, இன்று ₹160 என 2 நாளில் மொத்தம் சவரனுக்கு ₹400 உயர்ந்துள்ளது.

News December 11, 2025

‘கோல்ட் கார்டு விசா’: அறிமுகம் செய்தார் டிரம்ப்

image

அமெரிக்காவின் கோல்டு கார்டு விசா திட்டத்தை, டிரம்ப் அறிமுகப்படுத்தி வைத்தார். USA-ல் குடியேற்ற கொள்கைகள் கடுமையாக்கப்பட்டு வரும் அதேவேளையில், திறமையானவர்கள், பணக்காரர்களை ஈர்ப்பதற்காக இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. இதில், $1 மில்லியன் (சுமார் ₹8.9 கோடி) செலுத்தினால் போதும், USA-ல் விரைவாக குடியுரிமை பெறலாம். இதனிடையே இது ‘பணக்காரர்களுக்கான திட்டம்’ என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

error: Content is protected !!