News May 7, 2025
வங்கிகளுக்கு மே மாதம் 7 நாள்கள் விடுமுறை

பொதுத்துறை, தனியார் துறை வங்கிகளுக்கு இந்த மாதம் தமிழகத்தில் 7 நாள்கள் விடுமுறையாகும். அதன்படி, மே 1 இன்று பொது விடுமுறை. வருகிற 4-ம் தேதி ஞாயிறு என்பதால் அன்றும் வங்கிகள் திறக்கப்படாது. இதேபோல், வரும் 10, 11-ம் தேதிகள், 18, 24, 25-ம் தேதிகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை. அன்றைய நாள்களும் வங்கிகள் திறக்கப்படாது. ஆதலால் வங்கி செல்ல இருப்போர், திட்டமிட்டு செல்லும்படி வலியுறுத்தப்படுகிறார்கள்.
Similar News
News November 11, 2025
ஜடேஜா – சஞ்சு மாற்றம் உறுதி!

ஜடேஜாவை கொடுத்துவிட்டு RR-யிடம் இருந்து சஞ்சு சாம்சனை CSK வாங்குவது உறுதியாகிவிட்டதாக Cricbuzz தகவல் தெரிவித்துள்ளது. ஜடேஜா மட்டுமில்லாமல் சாம் கரணையும் விட்டுக்கொடுக்க CSK முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு இந்த 3 வீரர்களும் ஒப்புதல் அளித்து, ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
News November 11, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க..
News November 11, 2025
டெல்லி சம்பவம் பேரதிர்ச்சியை தருகிறது: விஜய்

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தவெக தலைவர் விஜய் வேதனை தெரிவித்துள்ளார். விலைமதிப்பற்ற பல உயிர்கள் பறிபோயுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர் கூறியுள்ளார். மேலும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் சீக்கிரம் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


