News August 20, 2024
மாரி செல்வராஜ் யார் என்பதை ‘வாழை’ வெளிப்படுத்தும்: SK

மாரி செல்வராஜ் யார் என்பதை ‘வாழை’ படம் எடுத்து காட்டும் என நடிகர் சிவகார்த்திகேயன் புகழாரம் சூட்டியுள்ளார். மாரி செல்வராஜ் தனது வாழ்க்கையில் நடந்ததை இந்த படத்தின் மூலம் காட்சிப்படுத்தியுள்ளார் என்று நெகிழ்ச்சி தெரிவித்த அவர், எளிய மக்களின் வலி, வேதனை, கண்ணீர், மகிழ்ச்சியை பதிவு செய்யும் போது சினிமா மிகவும் அழகாக இருக்கிறது என்றார். வாழை படம் பல விருதுகளை பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
Similar News
News January 20, 2026
ஐநாவுக்கு செக் வைக்க முயலும் டிரம்ப்

ஐ.நா. சபைக்கு மாற்றாக ‘போர்டு ஆப் பீஸ்’ என்ற புதிய சர்வதேச அமைப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடங்கி உள்ளார். இந்த அமைப்புக்கு டிரம்ப் தலைமையேற்றுள்ள நிலையில், இதில் ₹9000 கோடி கட்டணம் செலுத்தி மற்ற நாடுகள் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்தாத உறுப்பினர்கள் மூன்று ஆண்டுகள் வரை அந்த அமைப்பில் இருக்கலாம் எனவும் அமெரிக்கா விளக்கியுள்ளது.
News January 20, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 586 ▶குறள்: துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து என்செயினும் சோர்விலது ஒற்று. ▶பொருள்: ஆராய்ந்திட வந்த நிகழ்வில் தொடர்பற்றவரைப் போலக் காட்டிக்கொண்டு, அதனைத் தீர ஆராய்ந்து, அதில் எத்துணைத் துன்பம் வரினும் தாங்கிக் கொண்டு, தம்மை யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாதவரே சிறந்த ஒற்றர்.
News January 20, 2026
ஜப்பான் நாடாளுமன்றம் கலைப்பு

ஜப்பானில் பொதுத்தேர்தல் பிப்.8-ல் நடக்கும் என அந்நாட்டு PM சனே டகாய்ச்சி அறிவித்துள்ளார். அதிகரித்த செலவினம், வரி குறைப்பு & ஜப்பானின் பாதுகாப்பு கட்டமைப்பு தொடர்பாக தான் எடுக்கும் முடிவுகளுக்கு மக்களின் ஆதரவு தேவை என்றும் கூறியுள்ளார். முன்கூட்டியே தேர்தல் நடத்துவது தனது அரசியல் எதிர்காலத்திற்கு ஒரு ரிஸ்க் என்ற அவர், ஜன.23-ல் ஜப்பான் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


