News April 13, 2024
ஏப்.15 முதல் தடை: வங்கிக் கணக்கில் ₹5000 செலுத்தப்படும்

ஏப்.15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக கடல் பகுதியில் 60 நாட்களுக்கு மீன்களின் இனப்பெருக்க காலமாக அமல்படுத்தப்படுவதால், மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால், மீனவர்கள் தங்களது குடும்பத்தை சிரமமின்றி நடத்த, குடும்பம் ஒன்றுக்கு தலா ₹5000 வழங்கப்படும். இந்த நிதி விரைவில் மீனவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
Similar News
News November 18, 2025
உங்களுக்கு இந்த மெசேஜ் வந்ததா?

மக்களை ஏமாற்ற மோசடியாளர்கள் பல்வேறு வழிகளை பயன்படுத்துகிறார்கள். ஆதாரை அப்டேட் செய்யாவிட்டால், உங்களின் SBI YONO app பிளாக் செய்யப்படும் என்று பலருக்கும் வாட்ஸ்ஆப் மெசேஜ் வருகிறதாம். SBI லோகோவை DP-யாக வைத்துக் கொண்டு APK ஃபைல்களை அனுப்பி, அப்டேட் செய்ய இதை கிளிக் செய்ய சொல்கிறார்களாம். ஆனால், இது போலியான செய்தி, ஏமாற வேண்டாம் என்று PIB Fact Check எச்சரித்துள்ளது. உஷாராக இருங்க மக்களே.

பி.ஆர்.கவாய் தலித் சமூகத்திற்கு தீங்கிழைத்தவர்: விசிக எம்.பி

SC தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயை தலித் சமூகத்திற்கு தீங்கிழைத்தவர் என்று ரவிக்குமார் எம்.பி விமர்சித்துள்ளார். SC பட்டியலை கூறுபடுத்தும் சப் கேட்டகரைசேஷனுக்கு அனுமதி, கிரீமி லேயர் அளவுகோல் SC பிரிவினருக்கும் பொருந்தும் எனக் கூறி இரண்டு பெரிய தீமைகளை செய்திருப்பதாக அவர் சாடியுள்ளார். அச்சமூகத்தினருக்கு சரிசெய்யவே முடியாத சேதத்தை ஏற்படுத்திய நபராகவே கவாய் நினைவுகூரப்படுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.