News March 29, 2024

விரைவில் வருகிறது பாலாவின் இலவச மருத்துவமனை

image

இலவச மருத்துவமனை கட்ட வேண்டும் என்பதே தனது ஆசை என KPY பாலா தெரிவித்துள்ளார். மக்களுக்கு தேவையான பல்வேறு உதவிகளை செய்து வரும் பாலா, சமீபத்தில் அரசுப் பள்ளி ஒன்றுக்கு நடிகர் லாரன்ஸ் உதவியுடன் ₹15 லட்சம் வழங்கினார். இந்த நிலையில், இருதய நோயாளிகளுக்கு பயன்படும் வகையில் இலவச மருத்துவமனை ஒன்றை கட்ட வேண்டும் என்றும், தனது இந்த ஆசை விரைவில் நிறைவேறும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Similar News

News January 18, 2026

ஐரோப்பிய நாடுகளுக்கு 10% வரி விதித்த டிரம்ப்!

image

இங்கி., பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் மீது 10% வரி விதிக்க உள்ளதாக டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். டென்மார்க் & ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பல ஆண்டுகளாக எந்த வரியையும் விதிக்கவில்லை என்றும், இந்நிலையில் கிரீன்லாந்தை கைப்பற்றும் ஒப்பந்தம் எட்டப்படும் வரை வரும் பிப்.1 முதல் அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 10% வரி விதிக்கப்படும் என கூறியுள்ளார்.

News January 18, 2026

மகன் திருமணத்திற்கு பின் எனக்கு திருமணம்: பார்த்திபன்

image

தனது மகனுக்கு ஒரு திருமணம் முடிந்துவிட்டால், அதன்பின் தனக்கென ஒரு துணையைத் தேடிக்கொள்ள நினைப்பதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். புதிய பாதை படத்தின் மூலம் இயக்குநர் & நாயகனாக அறிமுகமான பார்த்திபன், 1990-ல் நடிகை சீதாவை மணந்த நிலையில், கடந்த 2001-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இந்நிலையில், தனக்கான துணை ஒரு புரிதலான தோழியாகவோ அல்லது ஒரு சிறந்த கம்பெனியனாகவோ இருக்கலாம் என்று விவரித்துள்ளார்.

News January 18, 2026

ராசி பலன்கள் (18.01.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!