News November 29, 2024
அலற வைக்கும் ரயில் சைக்கோவின் பின்னணி (1/2)

குஜராத்தில் 19 வயது பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற ஹரியானாவைச் சேர்ந்த ராகுல் கரம்வீரை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலம் தான் திடுக்கிட வைத்துள்ளது. தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, குஜராத் ரயில் நிலையங்களில் இதுவரை 5 பேரை அவர் கொலை செய்துள்ளார். இதில் 4 பேர் பெண்கள். அனைவரும் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். இவை அனைத்தும் ஒரு மாதத்திற்குள் நடந்துள்ளது.
Similar News
News November 12, 2025
USA-ல் போதுமான திறமைசாலிகள் இல்லை: டிரம்ப்

H-1B விசா கட்டண விவகாரத்தில் டிரம்ப் மனமிறங்கி உள்ளதாக தெரிகிறது. அமெரிக்காவில் சில துறைகளுக்கு திறமையான இந்தியர்களை பணியமர்த்த வேண்டும் எனவும் USA-வில் போதிய திறமையாளர்கள் இல்லை எனவும் அவர் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். பல நாட்களாக வேலை இல்லாமல் இருக்கும் அமெரிக்கர்களை, சவாலான பணிகளில் உடனடியாக ஈடுபடுத்த முடியாது என கூறிய அவர், இதற்கு வெளிநாட்டினர்தான் தேவை எனவும் கூறியுள்ளார்.
News November 12, 2025
பிஹாரில் ஆட்சி மாற்றம் உறுதி: தேஜஸ்வி யாதவ்

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மகாகத்பந்தன் கூட்டணி தான் நிச்சயம் வெல்லும் என்று RJD தலைவர் தேஜஸ்வி யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். NDA கூட்டணி வெற்றிபெறும் என்ற கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பாஜகவின் உத்தரவின் பேரில் நடந்துள்ளதாக தேஜஸ்வி குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த முறை நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று அவர் உறுதிபட தெரிவித்துள்ளார். யாருடைய கணிப்பு வெல்லும் என அறிய நவ.14 வரை காத்திருப்போம்.
News November 12, 2025
Airport Divorce- இதுதான் புது Relationship டிரெண்ட்!

‘Airport Divorce’ என்பது உண்மையான விவாகரத்து என்று அல்ல. ஏர்போர்ட்டில் செக்கிங் முடிந்து, Flight கிளம்பும் வரை தம்பதிகள் சிறிது நேரம் தனியாக செக்கிங் முடித்து, Flight கிளம்பும் வரை தனித்தனியாக இருப்பார்கள் அவ்வளவே. பயணத்துக்கு முன் ஏற்படும் சண்டை, கோபம் ஆகியவை தணிந்து, மன அமைதியுடன் பயணத்தைத் தொடங்க இது உதவும் என்கிறார், எழுத்தாளர் ஹூ ஆலிவர். தற்போது இதுதான், புது டிரெண்டாக மாறி வருகிறது.


