News December 4, 2025
AVM சரவணன் காலமானார்.. முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி

நேற்று இரவு தனது 86-வது பிறந்தநாளை கொண்டாடிய AVM சரவணன், இன்று அதிகாலை 5 மணியளவில் காலமானார். இந்த செய்தியை கேட்டு துடித்துப்போன ரஜினி, முதல் ஆளாக அவரின் குடும்பத்தினரை தொடர்புகொண்டு இரங்கல் தெரிவித்துள்ளார். AVM ஸ்டுடியோவின் 3-வது தளத்தில் அவருக்கு இன்று மாலை 3.30 மணி வரை இறுதி அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திரைபிரபலங்கள் இன்னும் சற்றுநேரத்தில் அஞ்சலி செலுத்தவிருப்பதாக கூறப்படுகிறது.
Similar News
News December 7, 2025
F1 ரீமேக்கில் அஜித்.. டைரக்டர் யார் தெரியுமா?

பில்லா, ஆரம்பம் போன்ற பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த அஜித்-விஷ்ணுவர்தன் கூட்டணி மீண்டும் ஒரு படத்திற்காக இணைகின்றனர். ஹாலிவுட்டில் பட்டையை கிளப்பிய பிராட் பிட்டின் ‘F1’ தமிழ் ரீமேக்கில் அஜித் நடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை நடப்பதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. ரேஸர் அஜித்திற்கு பிராட் பிட் கதாபாத்திரம் கச்சிதமாக பொருந்தும் தானே?
News December 7, 2025
Sports 360°: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்

*WC துப்பாக்கி சுடுதல், மகளிர் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் சுருச்சி சிங் தங்கம் வென்றார் *ஆடவர் பிரிவில் சாம்ராட் ராணாவுக்கு வெண்கலம் கிடைத்தது *ஜஸ்டின் கிரீவ்ஸ், ஷாய் ஹோப்-ன் மகத்தான ஆட்டத்தால், NZ Vs WI முதல் டெஸ்ட் டிரா ஆனது *ILT20-ல் துபாய் கேபிடல்ஸை, கல்ஃப் ஜெயண்ட்ஸ் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது *ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி அரையிறுதியில், இந்தியா-ஜெர்மனி இன்று பலப்பரீட்சை
News December 7, 2025
பாமக விவகாரம்.. EC-க்கு அதிகாரமில்லை: டெல்லி HC

PMK உள்கட்சி விவகாரத்தில் தலையிடுவதற்கு EC-க்கு அதிகார வரம்பு இல்லை என டெல்லி HC தெரிவித்துள்ளது. PMK தலைவர் விவகாரத்தில் EC-ன் முடிவுக்கு எதிராக ராமதாஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் உள்கட்சிக்குள் நிகழ்ந்த தனிப்பட்ட பிரச்னைக்கு சிவில் நீதிமன்றத்தை நாட ராமதாஸை அறிவுறுத்தியுள்ள HC, அன்புமணி நடத்திய பொதுக்குழு முறையானதா என்பதை எதிர்த்து ரிட் மனு தாக்கல் செய்ய முடியாது எனவும் கூறியுள்ளது.


