News March 6, 2025

தொகுதி மறுசீரமைப்பு ஏன்?

image

ஒரு குடிமகன், ஒரு வாக்கு, ஒரே மதிப்பு என்ற அரசியல் சமத்துவத்தின் அடிப்படையில், மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளை மக்கள்தொகைக்கு ஏற்ப நிர்ணயிக்கவும், சீரமைக்கவும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 81 வழி செய்கிறது. அதாவது, அனைத்து குடிமக்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் தரும் வகையில் தொகுதிகள் எண்ணிக்கை இருக்கவேண்டும். கடைசியாக 1973-ம் ஆண்டில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டன.

News March 6, 2025

ஆஸி. டென்னிஸ் ஜாம்பவான் ஸ்டோல் மரணம்

image

ஆஸ்திரேலிய டென்னிஸ் முன்னாள் வீரர் பிரெட் ஸ்டோல் (86) மரணமடைந்தார். சிட்னியில் பிறந்த அவர், அமெரிக்காவில் வசித்தபடி ஆஸி.காக டென்னிஸ் விளையாடினார். பிரெஞ்சு ஓபன், அமெரிக்க ஓபன் சாம்பியன் கோப்பைகளை கைப்பற்றியுள்ளார். இதுதவிர, 1962-69ம் ஆண்டுகால கட்டத்தில் 10 முறை இரட்டையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். கலப்பு இரட்டையர் பிரிவிலும் 7 முறை ஸ்டோல் கோப்பைகளை வென்றுள்ளார்.

News March 6, 2025

மக்களவையில் இனி 848 எம்பிக்களா?

image

புதிய நாடாளுமன்ற இருக்கைகள் அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டால் (யூகத்தில்), புதிய மக்களவையில் மொத்தம் 848 எம்பிக்கள் இருப்பர். அப்படி நடந்தால் மக்கள்தொகை குறைந்த தமிழ்நாடு (10 இடங்கள்), கர்நாடகா(13), ஆந்திரா- தெலங்கானா (12) இடங்களையும், மக்கள்தொகை அதிகமுள்ள உபி (63), பிஹார் (39), ராஜஸ்தான்(25), மபி(23) இடங்களையும் கூடுதலாக பெறுவார்கள். இது யாருக்கு சாதகம்? கமெண்ட்டில் சொல்லுங்க.

News March 6, 2025

தமிழ்நாட்டு தம்பதிகளுக்கு சவால்

image

2026-க்குள் தமிழக மக்கள்தொகை 10.19 கோடியை எட்டினால் தான், எம்பி தொகுதிகள் குறையாமல் காக்க முடியும் (புள்ளிவிவர அடிப்படையில்). ஆனால், தற்போது மக்கள்தொகை 7.7 கோடி என்னும் நிலையில் 2.5 கோடி பற்றாக்குறை உள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் 10.6 லட்சம் குழந்தைகள் பெற்றால் மட்டுமே இலக்கை எட்டமுடியும். தற்போதுள்ள குறைந்த <<15668950>>TFR<<>>(1.52), 9 மாத பிரசவ காலம் ஆகியவற்றின் அடிப்படையில், இது நிச்சயம் சாத்தியமில்லை.

News March 6, 2025

அமித்ஷா என்ன சொன்னார்?

image

தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டால், தென் மாநிலங்களுக்கு இப்போது இருப்பதில் ஒரு தொகுதி கூட குறையாது என்று உள்துறை அமித் ஷா வாக்குறுதி அளித்தார். ஆனால், உபி, மபி, பிஹார் உள்ளிட்ட மக்கள்தொகை அதிகமுள்ள மாநிலங்களின் தொகுதிகள் எண்ணிக்கை உயராது என அவர் கூறவில்லை. இதுவே சந்தேகத்துக்கு காரணம். ஏனெனில், புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் 848 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது இந்த சந்தேகத்தை அதிகமாக்குகிறது.

News March 6, 2025

முதல்வர் ஸ்டாலினின் ஐடியா ஒர்க் அவுட் ஆகுமா?

image

மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டால் தமிழகம் 8 எம்பி இடங்களை இழக்கும். இதை தடுக்க தமிழக மக்கள் உடனடியாக அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள CM ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். 2026-க்குள் அந்த அளவுக்கு மக்கள்தொகையை உயர்த்த பிறப்பு விகிதம் (<<15668950>>TFR<<>>) 3.23 ஆக இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் TFR 1.52 மட்டுமே. எவ்வளவுதான் முயன்றாலும் அவ்வளவு குழந்தைகளை பெற முடியாது என்பதே யதார்த்தம்.

News March 6, 2025

தமிழ்நாட்டிற்கு என்ன இழப்பு?

image

மக்கள்தொகைக்கு ஏற்ப நாடாளுமன்ற, சட்டப்பேரவை இடங்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும் என்பது சட்டம். அதன் அடிப்படையில், ஆரம்பத்தில் தொகுதிகள் வரையறை செய்யப்படும்போது நாட்டின் மக்கள்தொகையில் தமிழகத்தின் பங்கு 7.18% ஆக இருந்ததால் 39 தொகுதிகள் கிடைத்தது. ஆனால், குடும்பக் கட்டுப்பாட்டை தீவிரமாக அமல்படுத்தியதால் தற்போது மக்கள்தொகை 5.42%-மாக குறைந்ததால், 8 தொகுதிகள் குறையும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

News March 6, 2025

CT கோப்பை நமக்குத்தான்… கோலியை நம்பலாம்: கபில்தேவ்

image

சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா கைப்பற்றும் என முன்னாள் கேப்டன் கபில்தேவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கோலி மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாகவும், தோனியை போன்று ஆட்டத்தை சிறப்பாக முடிக்கும் திறமை அவரிடம் மிக அதிகமாக இருப்பதாகவும் பாராட்டியுள்ளார். இறுதிப்போட்டியில் இந்தியா சிறப்பாக விளையாடும் என்றாலும், எதிரணியை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

News March 6, 2025

லிவ் இன் உறவு… பாலியல் புகார் கூற முடியாது: சுப்ரீம் கோர்ட்

image

திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் உறவில் வாழும் ஜோடிகளுக்கு சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. நீண்ட காலம் லிவ் இன் உறவில் இருந்த பெண், தனது இணையர் மீது பாலியல் வன்கொடுமை புகார் செய்ய முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. 16 ஆண்டுகள் லிவ் இன் உறவில் இருந்து பிரிந்த கல்லூரி பேராசிரியர் தொடர்ந்த பாலியல் வழக்கில், இதனை கோர்ட் தெளிவுபடுத்தியுள்ளது.

News March 6, 2025

ஜெகத்ரட்சகன் நிறுவனத்தில் ED சோதனை

image

சென்னை பாண்டி பஜாரில் உள்ள திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அக்கார்டு டிஸ்டில்லர்ஸ் என்ற நிறுவனத்திலும் சோதனை நடந்து வருகிறது. SNJ என்ற மதுபான நிறுவனம், டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் காலை முதல் ED அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் 3 நண்பர்களின் வீடுகளிலும் சோதனை நடப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!