India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
DMK சார்பில் தமிழகம் முழுவதும் நீர், மோர் பந்தல் அமைக்க தொண்டர்களுக்கு அக்கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. மக்களை கோடைக்கால வெப்பத்தில் இருந்து காக்கும் வகையில் தண்ணீர் பந்தலில், இளநீர், குளிர்பானம், தர்பூசணி போன்ற பொருட்களை வழங்கி தாகம் தணிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. கோடைக்காலம் முழுவதும் தண்ணீர் பந்தல் செயல்படும் வகையில், நிர்வாகிகள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
சாலைகளில் கொடிக் கம்பங்கள் வைப்பதை ஜனநாயக உரிமையாக பார்க்க முடியாது என ஐகோர்ட் மதுரை கிளை கண்டித்துள்ளது. நெடுஞ்சாலைகளில் உள்ள கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்றுமாறு ஐகோர்ட் மதுரை கிளையின் தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் கொடி கம்பங்களை கட்சி அலுவலகங்களில் வைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறி தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய மறுத்துவிட்டனர்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே சிறுமிகள், மாணவிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. இதை தடுக்கும் விதமாக, ஆபாச படம், வீடியோவை பதிவிறக்கம் செய்து பார்த்த சுமார் 13 ஆயிரம் பேரை சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும், வியாபார நோக்கில் ஆபாச படம் & வீடியோ பதிவிறக்கம் செய்தால், 10 ஆண்டுகள் சிறை விதிக்கும் வகையில் கைது செய்யப்படுவர் என்றும் எச்சரித்துள்ளனர்.
தவெக சார்பில் நாளை நடைபெறும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்பார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. தற்போது, மாவட்டந்தோறும் 5 இஸ்லாமிய நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு தவெக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நாளை மாலை இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
ஒரே மைதானத்தில் ஆடுவது இந்தியாவுக்கு சாதகம் இல்லை என AUS வீரர் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார். இந்திய அணி சிறப்பாக விளையாடுவதே வெற்றிபெற காரணம் என்றும், ஒரே இடத்தில் விளையாடுவது மட்டுமே வெற்றிக்கு போதுமானது என்பதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, பேட் கம்மின்ஸ், மைக் ஆதர்டன், நாசர் உசேன் உள்ளிட்டோர் ஒரே மைதானத்தில் விளையாடுவது IND அணிக்கு சாதகம் என அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
உதயநிதி மீது புதிய வழக்குகள் பதியக் கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சனாதனம் தொடர்பாக உதயநிதி பேசிய கருத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் பதியப்பட்டன. இதை எதிர்த்து உதயநிதி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இந்த உத்தரவை பிறப்பித்தது. மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் எனக் கூறி, வழக்கை ஏப்.21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
சென்னையில் தங்கம் விலை இன்று காலை 1 கிராமுக்கு ரூ.45ம், ஒரு சவரனுக்கு ரூ.360ம் குறைந்தது. இதனால் நகைப்பிரியர்கள் சற்று மகிழ்ச்சியில் இருந்த நிலையில், சில மணி நேரத்திலேயே விலை மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி, 1 கிராமுக்கு ரூ.40ம், சவரனுக்கு ரூ.320ம் உயர்த்தப்பட்டது. இதனால் ஆபரணத் தங்கம் விலை 1 கிராம் ரூ.8,060க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.64,480க்கும் விற்கப்படுகிறது. உங்கள் ஊரில் தங்கம் விலை என்ன?
தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே பனிப்போர் நீடித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், ஆளுநர் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வித் துறை வளர்ச்சிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி முட்டுக்கட்டை போடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
நடிகர்கள் மாதவன், சித்தார்த், நயன்தாரா நடிப்பில் உருவான ‘TEST’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஏப்ரல் 4 ஆம் தேதி நேரடியாக வெளியாகிறது. கிரிக்கெட் மைதானத்தை மையமாக கொண்டு சஷிகாந்த் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. மாதவன், நயன்தாரா இருவரும் இணைந்து நடித்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்தத் திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
தொகுதிகள் மறுசீரமைப்பு சட்டப்படி தவறாகாது. அதேநேரம், மக்கள்தொகையை கட்டுப்படுத்தியதற்கு தண்டனையாக <<15669107>>தொகுதிகள் இழப்பு<<>> என்பதும் ஏற்க முடியாதது. அதிக <<15669167>>குழந்தைகள் பெறுவதெல்லாம்<<>> நடைமுறைக்கு சாத்தியமாகாது. ஆகவே, மாநிலத்தில் தற்போதைய பிரதிநிதித்துவத்தையும், உரிமைகளையும் இழக்காத வகையில் ஒரு ஏற்பாட்டை செய்ய மத்திய அரசை தென்மாநிலங்கள் வலியுறுத்தி, ஒரு தீர்வை எட்டுவதே சரியான வழியாகும்.
Sorry, no posts matched your criteria.