News April 11, 2024

முதலில் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழுங்கள்

image

இளைஞர்கள் முதலில் லிவ் இன் உறவில் வாழ்ந்து விட்டுப் பிறகு திருமணம் செய்து கொள்ள வேண்டுமென பழம்பெரும் பாலிவுட் நடிகை ஜீனத் அமான் தெரிவித்துள்ளார். ரசிகரின் கேள்விக்கு அவர் தனது இன்ஸ்டாவில் அளித்துள்ள பதிலில், “என்னுடைய மகன்களுக்கு இதே அறிவுரையை தான் வழங்கினேன். கருத்து வேறுபாடு இருந்தாலும் இருவரும் சேர்ந்து வாழ முடியுமா என பார்க்க வேண்டும். இந்தியாவில் லிவ் உன் உறவை பாவமாக கருதுவதை அறிவேன்”என்றார்.

News April 11, 2024

சாதனைகளை கூறும் அரசியல் வேண்டும்

image

நவீன அரசியல் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்ளும் அரசியலாக இல்லாமல், சாதனைகளைக் கூறும் அரசியலாக இருக்க வேண்டும் என கமல்ஹாசன் கூறியுள்ளார். மதுரையில் CPM வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து பேசிய அவர், மதுரையின் பாசம், வீரம், திமுக, நமது வேட்பாளர், என்னையும் பிரிக்க முடியாது. நல்லவர்கள் கையில் ஆட்சி கிடைத்தால் கல்வி, குடிநீர் உள்ளிட்ட நல்ல திட்டங்கள் கிடைக்கும் என கூறியுள்ளார்.

News April 11, 2024

தேர்தல் பறக்கும் படை எவ்வாறு செயல்படுகிறது?

image

தேர்தல் நடத்தை விதி அமலானதும் ரூ.50,000க்கு மேல் மதிப்புள்ள ரொக்கம் அல்லது பொருள்களை கொண்டு செல்வதை பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். ஆவணங்கள் முறையாக இல்லாவிட்டால் அவை பறிமுதல் செய்யப்படும். அதே போல பணப்பட்டுவாடா தொடர்பான புகார் கிடைத்ததும் பறக்கும் படைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்லும். பிறகு 50 நிமிடங்களுக்குள் உதவி தேர்தல் அலுவலருக்கு பறக்கும் படை அறிக்கை அளிக்கும்.

News April 11, 2024

திமுக, அதிமுக செய்த சாதனை இதுதான்

image

திமுக, அதிமுக ஆட்சியில் செய்த சாதனை மக்களை போதை பழக்கத்திற்கு அடிமையாக்கியதுதான் என அன்புமணி விமர்சித்துள்ளார். சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், அடுத்த தலைமுறையை காப்பாற்ற வேண்டுமெனில் திமுகவை தோற்கடிக்க வேண்டும். திமுக தோல்வியடைந்தால்தான் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கிடைக்கும் என்றார். மேலும், சேலத்தில் திமுக கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை என்றார்.

News April 11, 2024

காதல் விவகாரத்தில் இளைஞர் படுகொலை

image

மதுரையில் காதல் விவகாரத்தில் கார்த்திக் (27) என்ற இளைஞரை பெண்ணின் தந்தையும், சகோதரனும் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார்த்திக்கும் அந்தப் பெண்ணும் ஒரே ஜாதியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், கார்த்திக் லோடு மேன் வேலை பார்த்து வந்ததால் பெண் வீட்டில் கடுமையான எதிர்ப்பு இருந்து வந்தது. இந்நிலையில், கார்த்திக்கை அரிவாள் மற்றும் கத்தியால் கொன்ற இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News April 11, 2024

மான்டி கார்லோ மாஸ்டர்ஸில் சுமித் நாகல் தோல்வி

image

மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் சுமித் நாகல் தோல்வியை தழுவினார். பிரான்சில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 2ஆவது சுற்று போட்டியில், உலக தரவரிசையில் 7ஆவது இடத்தில் உள்ள டென்மார்க்கின் ஹோல்கர் ரூனை எதிர்கொண்ட சுமித் நாகல், 3-6 6-3 2-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். 49 ஆண்டுகளுக்கு பிறகு மான்டி கார்லோ தொடரில் விளையாடிய முதல் இந்தியர் என்ற பெருமை சுமித் நாகலையே சேரும்.

News April 11, 2024

உதயநிதியின் முதல்வர் கனவு பலிக்காது

image

திமுகவின் 3 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு வேதனை மட்டுமே பரிசாக கிடைத்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். ஆரணியில் அதிமுக வேட்பாளர் கஜேந்திரனை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், “என்னை அவமதிப்பதாக நினைத்துக்கொண்டு விவசாயிகளை ஸ்டாலின் கொச்சைப்படுத்தி வருகிறார். கருணாநிதி முதல்வர், அவருக்கு பிறகு ஸ்டாலின் வந்திருக்கிறார். அடுத்து உதயநிதி வர முயற்சிக்கிறார். ஆனால் அது நடக்காது” என்றார்.

News April 11, 2024

பாஜக நமது உரிமைகளை பறிக்க நினைக்கிறது

image

மத்தியில் ஆளும் பாஜக அரசு கொஞ்சம் கொஞ்சமாக நமது உரிமைகளை பறிக்க நினைக்கிறது என தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். தூத்துக்குடி தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், வெள்ள நிவாரண நிதியாக ஒரு ரூபாய் கூட மத்திய அரசு கொடுக்கவில்லை. ஆனால், தேர்தலுக்காக பிரதமர் மோடி தமிழ்நாட்டை சுற்றி வருகிறார். மதக் கலவரத்தை உருவாக்கி வாக்குகளை பெறலாம் என நினைக்கிறது என பாஜகவை விளாசியுள்ளார்.

News April 11, 2024

பனங்கற்கண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

image

பதனியை நன்கு காய்ச்சி பனங்கற்கண்டு தயாரிக்கப்படுகிறது. பனங்கற்கண்டு இருமல், மார்புச்சளி தொண்டை கரகரப்பு போன்றவற்றை குணப்படுத்துவதில் சிறந்தது. பனங்கற்கண்டை வாயில் போட்டு, அதை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து அந்த உமிழ் நீரை விழுங்கி வந்தால், வாய்ப்புண், தொண்டை வலி, வாய் துர்நாற்றம் போன்றவை முற்றிலுமாக நீங்கும். கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் புண்களை இவை சரி செய்ய உதவுகிறது.

News April 11, 2024

IPL: மும்பை அணி பவுலிங்

image

வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை – பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற MI கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் RCB பேட்டிங் செய்ய உள்ளது. இதுவரை ஆடிய போட்டிகளில் இரு அணிகளும் 1 வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், புள்ளிப் பட்டியலில் MI 8ஆவது இடத்திலும், RCB 9ஆவது இடத்திலும் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?

error: Content is protected !!