News August 7, 2024
ஆகஸ்ட் 7 வரலாற்றில் இன்று!

➤1642 – முதுமொழி அறிஞர் உமறுப் புலவர் பிறந்த நாள். ➤1714 – கங்கூட் சமரில் ரஷ்யக் கடற்படை வென்றது. ➤1906 – கொல்கத்தாவில் வங்கப் பிரிவினை எதிர்ப்புப் போராட்டம் தொடங்கியது. ➤1955 – சோனி நிறுவனம் டிரான்சிஸ்டரை அறிமுகப்படுத்தியது. ➤1976 – வைக்கிங் 2 விண்கலம் செவ்வாயை சென்ற
அடைந்தது. ➤2017 – உ.பி., கோரக்பூர் அரசு மருத்துவமனையில் 60 குழந்தைகள் உயிரிழந்தனர். ➤2018 – முத்தமிழறிஞர் கருணாநிதி மறைந்த நாள்.
Similar News
News November 11, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல் ▶குறள் எண்: 516 ▶குறள்: செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு எய்த உணர்ந்து செயல். ▶பொருள்: முதலில் ஒரு செயலைச் செய்ய வேண்டியவனின் தகுதிகளை எண்ணி அவன் செய்ய வேண்டிய செயலின் தகுதியையும் எண்ணி பிறகு அவனையும் அச்செயலையும் செய்யப்படும் காலத்தோடு பொருத்தி எண்ணிச் செயல் செய்க.
News November 11, 2025
ஷமிக்கு ஆதரவாக களமிறங்கிய கங்குலி

AUS, SA அணிகளுக்கு எதிரான போட்டிகளில், இந்திய அணியில் ஷமி இடம்பெறாதது விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஷமியை அணியில் இருந்து விலக்கி வைக்க, எந்த காரணத்தையும் தன்னால் கண்டறிய முடியவில்லை என கங்குலி தெரிவித்துள்ளார். ரஞ்சி டிராபியில் ஷமி சிறப்பாக விளையாடி வருவதாகவும், தேர்வுக்குழு நிச்சயம் அதை பார்த்திருக்கும் என்றும் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
News November 11, 2025
பிஹாரில் இன்று 2-ம் கட்ட தேர்தல்

பிஹாரில் இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. 122 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக, அம்மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் 20 மாவட்டங்களில் மொத்தம் 45,399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் 14-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.


