News November 11, 2024

முன்னாள் அமைச்சர் மீது தாக்குதல் முயற்சி

image

மதுரை உசிலம்பட்டி அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் RB உதயகுமார் மீது தாக்குதல் முயற்சி நடந்துள்ளது. அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தை முடித்துவிட்டு திருமங்கலம் நோக்கி சென்றபோது, அவரது காரை வழிமறித்து தாக்க முயன்றுள்ளனர். இதில், அவர் உடன் இருந்த அதிமுக நிர்வாகிகள் 3 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அமமுக நிர்வாகிகள் எனக் கூறப்படுகிறது.

Similar News

News November 12, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶நவம்பர் 12, ஐப்பசி 26 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:00 AM – 10:30 AM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 AM ▶திதி: அஷ்டமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: மூலம் ▶சிறப்பு: காலபைரவாஷ்டமி. ▶வழிபாடு: பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுதல்.

News November 12, 2025

நேரடி வரி வருவாய் ₹12.92 லட்சம் கோடியாக அதிகரிப்பு

image

கடந்த ஏப்ரல் 1 முதல் நவம்பர் 10 வரையிலான, நேரடி வரி வருவாய் தொடர்பான தகவல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், நேரடி வரி வருவாய் 7% அதிகரித்து ₹12.92 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 12.08 லட்சம் கோடியாக இருந்தது. 2025-26 நிதியாண்டில் நேரடி வரி வருவாய் ₹25.20 லட்சம் கோடியாக மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 12.7% அதிகமாகும்.

News November 12, 2025

தற்கொலைப்படை தாக்குதலில் இந்தியாவின் சதி: பாக்., PM

image

<<18258662>>பாகிஸ்தானில் கார் வெடித்து<<>> 12 பேர் உயிரிழந்த நிலையில், இது தற்கொலைப்படை தாக்குதல் என அந்நாட்டு PM ஷெபாஸ் ஷெரிஃப் தெரிவித்துள்ளார். இதில் இந்தியாவின் சதி இருப்பதாகவும், ஆப்கனை தளமாக கொண்டு செயல்படும் இந்தியாவின் அடிமையான TTP தீவிரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், பாகிஸ்தானை அழிப்பதையே நோக்கமாகக் கொண்டு இந்தியா செயல்படுவதாகவும் சாடியுள்ளார்.

error: Content is protected !!