News April 30, 2024

இந்து, முஸ்லிம் அமைதியை சீர்குலைக்க முயற்சி

image

இந்து, முஸ்லிம் மக்களிடையேயான அமைதியை சீர்குலைக்க ராஷ்ட்ரிய ஜனதா தளம் முயற்சிப்பதாக, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் குற்றம்சாட்டியுள்ளார். மாதேபுராவில் பிரசாரம் செய்த அவர், இந்து, முஸ்லிம் இடையேயான அமைதியை சீர்குலைக்க நினைத்தபோது, கூட்டணியை விட்டு வெளியேறியதாகத் தெரிவித்தார். ஆர்ஜேடி கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ், தற்போது பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 15, 2025

மெஸ்ஸிக்கு ₹200 கோடி; இந்திய கால்பந்துக்கு எவ்வளவு?

image

மெஸ்ஸியின் இந்திய பயணத்துக்கு ₹200 கோடி செலவானதாம். இவரின் 3 நாள் நிகழ்ச்சிக்கு இத்தனை கோடி செலவு செய்யும் நிறுவனங்களும், அரசும், இந்தியாவில் கால்பந்தை மேம்படுத்த இவ்வளவு செலவிட்டிருந்தால், இங்கேயும் மெஸ்ஸிகள் உருவாகி இருப்பார்கள். உலக தரவரிசையில் 142-வது இடத்தில் இருக்க மாட்டோம். கால்பந்து வளராததற்கு கிரிக்கெட்டை மட்டுமே குறை கூறாமல், வேறு வழியில் சிந்திக்க வேண்டியது இன்றைய தேவை. உங்க கருத்து?

News December 15, 2025

ALERT: இந்த வயதினருக்கு திடீர் மாரடைப்பு வர அதிக வாய்ப்பு

image

இந்தியாவில் 45 வயதுக்கு குறைந்தவர்களின் திடீர் மரணங்களில், மாரடைப்புதான் முதன்மையான காரணம் என Indian Journal of Medical Research தெரிவித்துள்ளது. இதில் பலர் வெளிப்புறத்தில் ஆரோக்கியமாக உள்ளனர். ஆனால், அதீத மன அழுத்தம், குறைவான தூக்கம், புகை–மது பழக்கம், அதிக சர்க்கரை, போதிய உடலுழைப்பு இல்லாமை, High BP, கண்டறியப்படாத இதய கோளாறுகள் ஆகியவையே திடீர் மாரடைப்புகளுக்கு காரணங்களாக அமைந்துள்ளது. உஷார்..!

News December 15, 2025

அதிமுகவில் போட்டா போட்டி போட்டு விருப்பமனு!

image

2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு விநியோகம் இன்று தொடங்கியது. முதல் நாளில் Ex அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலர் விருப்பமனு வாங்கிச் சென்றனர். அதேபோல், பல நிர்வாகிகள் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிக்காக ஆர்வமுடன் மனுவை வாங்கிச் சென்றனர். சிலர், MGR, ஜெயலலிதாவின் வேடமணிந்து வந்து விருப்பமனு பெற்றுச் சென்றனர்.

error: Content is protected !!