News April 23, 2025
25 ஆண்டுகளுக்கு முன் இதே பாணியில் தாக்குதல்

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்தியா வந்திருக்கும் சூழலில், பஹல்காமில் தாக்குதல் நடந்திருக்கிறது. இதேபோல், 25 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன் இந்தியா வந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டது. ராணுவ சீருடை அணிந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் அனந்த்நாக்கின் சித்திசிங்பூரில் உள்ள குருத்வாராவில் புகுந்து கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் 35 அப்பாவி சீக்கியர்கள் உயிரிழந்தனர்.
Similar News
News November 8, 2025
இரட்டை இலக்கத்தில் தொகுதி கேட்போம்: CPM

வரும் சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதி கேட்க வேண்டும் என்ற எண்ணம் தங்களுக்கு உள்ளதாக, CPM அரசியல் தலைமை குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பாஜகவை வீழ்த்துவது என்ற ஒரு அம்சத்தில் மட்டும்தான் திமுகவுடன் கூட்டணியில் உள்ளதாகவும், மற்ற விஷயங்களில் மாறுபட்ட கொள்கைகளே உள்ளதாகவும் கூறியுள்ளார். முன்னதாக கடந்த தேர்தலில் 6 தொகுதிகளில் CPM போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
News November 8, 2025
ECI அதிகாரிகளுக்கு பிரியங்கா காந்தி பகிரங்க எச்சரிக்கை

பிஹாரில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரியங்கா காந்தி, ஞானேஷ் குமார் உள்ளிட்ட ECI தலைமை அதிகாரிகளுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார். பொதுமக்களின் வாக்குகளை திருடி துரோகம் இழைத்த ECI அதிகாரிகளை மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள் என அவர் கூறியுள்ளார். மேலும், நிம்மதியாக பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிடலாம் என நினைத்தால், அது ஒருபோதும் நடக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News November 8, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.8) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க..


