News July 13, 2024

அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 90ஆக உயர்வு

image

அசாமில் ஜூன் மாதம் முதல் கனமழை பெய்கிறது. எனவே பிரம்மபுத்திரா உள்ளிட்ட நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, கரையோரமாக உள்ள 2,406 கிராமங்களுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் 24 மாவட்டங்களில் 14.4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். படகில் சென்ற 5 பேர் உள்ளிட்ட 7 பேர் பலியாகினர். இதையடுத்து அசாமில் வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 90ஆக அதிகரித்துள்ளது.

Similar News

News July 11, 2025

பாக்., பஸ்ஸில் 9 பேரை சுட்டுக் கொன்ற கொடூரம்

image

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பஸ்ஸில் 9 பயணிகளை கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. குவெட்டாவில் இருந்து லாகூர் சென்று கொண்டிருந்த பஸ்ஸில் துப்பாக்கியுடன் ஏறிய சிலர், பயணிகளை தீவிரமாக சோதனை செய்தனர். பின்னர், அதில் 9 பேரை மட்டும் சுட்டுக் கொன்றனர். இந்த கொடூர சம்பவத்திற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. So Sad..!

News July 11, 2025

95 வருட சாதனையை உடைப்பாரா கில்?

image

இந்திய டெஸ்ட் கேப்டன் கில் ENG-க்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரில், 4 இன்னிங்ஸில் 585 ரன்களை விளாசி இருக்கிறார். அவர் இன்னும் 6 இன்னிங்ஸில் 390 ரன்களை அடித்தால் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனின் 95 வருட ரெக்கார்டை தகர்த்து விடுவார். 1930-ல் பிராட்மேன் ENG-க்கு எதிராக 974 ரன்களை அடித்திருந்ததே சாதனையாக இருக்கிறது. சாதிப்பாரா கில்?

News July 11, 2025

ஜூலை 14-ல் பூமி திரும்பும் ஆக்சியம் 4 குழு

image

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் கடந்த ஜூன் 25-ம் தேதி ஃபுளோரிடாவின் கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டனர். அங்கு தங்களின் ஆராய்ச்சி பணிகளை முடித்துக்கொண்டு ஜூலை 10-க்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் பூமிக்கு திரும்பலாம் என்ற தகவல் இருந்தது. இந்நிலையில், ஜூலை 14-ல் இந்த ஆக்சியம் 4 குழு பூமிக்கு திரும்பவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

error: Content is protected !!