News September 28, 2025

Asia Cup Finals : இந்தியா பவுலிங்

image

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில், இந்திய அணி முதலில் பவுலிங் செய்யவுள்ளது. இந்த தொடரின் லீக் சுற்றில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்திலும், சூப்பர் 4 சுற்றில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வீழ்த்தியுள்ளது. விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ள இந்தியா, இறுதிப்போட்டியிலும் ஆதிக்கத்தை தொடர அதிக வாய்ப்புண்டு. அதே நேரத்தில், பாகிஸ்தானும் கடுமையான போட்டியை வெளிப்படுத்தும். யார் ஜெயிப்பாங்க?

Similar News

News November 8, 2025

நடிகை கௌரி கிஷனிடம் மன்னிப்பு கேட்டார்

image

நடிகை கௌரி கிஷனை உருவக்கேலி செய்த குற்றச்சாட்டில் யூடியூபர் கார்த்திக் மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தான் எழுப்பிய கேள்வி தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், காயப்பட்டிருந்தால் Sorry எனவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், ‘தன்னுடைய கேள்வி தவறு’ என கூறாமல் இன்னமும் ‘தவறாக புரிந்துகொள்ளப்பட்டது’ என யூடியூபர் கூறுவதால் சரியான முறையில் மன்னிப்பு கேட்கவில்லை என பலரும் சாடி வருகின்றனர்.

News November 8, 2025

IND Vs AUS T20 போட்டி: இந்திய அணி பேட்டிங்

image

IND Vs AUS 5-வது T20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ்(C), அபிஷேக் சர்மா, சுப்மன் கில், ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, பும்ரா ஆகியோர் களமிறங்குகின்றனர். ஏற்கெனவே 2 போட்டிகளில் வென்றுள்ள இந்திய அணி இப்போட்டியில் வென்றால் தொடரை கைப்பற்றும்.

News November 8, 2025

BREAKING: மருத்துவமனைக்கு விரைந்த ரஜினிகாந்த்

image

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த அண்ணன் சத்யநாராயண ராவுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால், பெங்களூருவில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியை கேட்டவுடன் பதறிப்போன ரஜினி, ஹாஸ்பிடலுக்கு விரைந்து சென்று அண்ணனிடம் உடல்நலம் குறித்து விசாரித்தார். இதன்பின், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

error: Content is protected !!