News March 24, 2024
ஹர்ஷித் ராணாவின் திமிர்த்தனமான செயல்

SRH அணிக்கு எதிரான போட்டியில் KNR அணியின் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா நடந்துகொண்ட விதம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதிரடி ஆட்டத்திற்கு பெயர்பெற்ற SRH அணியின் சீனியர் வீரரான மயங்க் அகர்வாலின் (33) விக்கெட்டை ராணா எடுத்தார். அகர்வாலை வெறுப்பேற்றும் வகையில், அவரது முகத்திற்கு முன்பாக கையில் முத்தமிட்டு அதை காற்றில் பறக்கவிட்டதை, அப்பட்டமான திமிர்த்தனம் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
Similar News
News November 11, 2025
₹7,000 கோடி to ₹5,000 கோடி.. இழப்பை குறைக்கும் VI

வோடஃபோன் ஐடியா நிறுவனம், 2-வது காலாண்டின் ஒருங்கிணைந்த நிகர இழப்பை ₹5,524 கோடியாக குறைத்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ₹7,176 கோடியாக இருந்தது. அதேபோல், வருவாய் ₹11,194 கோடி (முன்பு ₹10,932 கோடி), ஒரு கஸ்டமரிடம் ஈட்டும் சராசரி வருவாய் ₹188-ஆக (முன்பு ₹166) உயர்ந்துள்ளது. முன்னதாக, வருவாய் இழப்பை சமாளிக்க முடியாமல், இந்நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறுவதாக வதந்தி பரவியது.
News November 11, 2025
டெல்லி குண்டு வெடிப்பு: கார் ஓனர் அடையாளம் தெரிந்தது

<<18252501>>டெல்லி குண்டு வெடிப்பில்<<>> ஈடுபடுத்தப்பட்ட கார் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. HR26 CE 7674 என்ற பதிவெண் கொண்ட அந்த காரானாது, ஹரியானாவின் குருகிராமைச் சேர்ந்த முகமது சல்மான் என்பவருக்கு சொந்தமானது. அவரை கைது செய்து போலீசார் விசாரித்த போது, ஜம்மு & காஷ்மீரின் புல்வாமா பகுதியைச் சேர்ந்த தாரிக் என்பவருக்கு காரை விற்றுவிட்டதாக தெரிவித்ததுள்ளார். அடுத்தக்கட்ட விசாரணையை போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர்.
News November 11, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல் ▶குறள் எண்: 516 ▶குறள்: செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு எய்த உணர்ந்து செயல். ▶பொருள்: முதலில் ஒரு செயலைச் செய்ய வேண்டியவனின் தகுதிகளை எண்ணி அவன் செய்ய வேண்டிய செயலின் தகுதியையும் எண்ணி பிறகு அவனையும் அச்செயலையும் செய்யப்படும் காலத்தோடு பொருத்தி எண்ணிச் செயல் செய்க.


