News November 17, 2024
சகோதரர்களுக்குள் சிக்கனால் வந்த தகராறு: பறிபோன உயிர்

போபாலில் அன்ஷுல் என்பவர் சிக்கன் வாங்கி வர, வீட்டிற்கு non-veg வாங்கி வருவதை விரும்பாத அவரின் சகோதரர்கள் குல்தீப், அமன் எதிர்த்தனர். மூவரும் மது போதையில் இருந்த நிலையில், தகராறில் சகோதரர்கள் இருவரும் அன்ஷுல் கழுத்தை கயிற்றால் நெரித்துள்ளனர். மயக்கமடைந்த அன்ஷுலை தாயார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற நிலையிலும் அவர் மரணமடைந்துள்ளார். மகன்களை காப்பாற்ற தாயார் முயல, போலீசார் உண்மையை கண்டுபிடித்துள்ளனர்.
Similar News
News December 8, 2025
இதை விட கேவலமான விஷயம் இல்லை: அமைச்சர்

உலகத்திலேயே சொந்தமாக ஏர்லைன்ஸ் இல்லாத ஒரே நாடு இந்தியாதான் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் சுட்டிக்காட்டியுள்ளார். இதை விட கேவலமான விஷயம் ஒன்று இல்லை என விமர்சித்த அவர், இங்கிருக்கும் மதுரைக்கு செல்ல ₹50 ஆயிரம் கேட்பதாக தெரிவித்துள்ளார். இதனால் பிளைட் வேண்டாம் என டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டு, ரயில், பஸ்ஸில் செல்ல அவர் முடிவெடுத்ததாகவும் அவர் நகைச்சுவையாக பேசியுள்ளார்.
News December 8, 2025
கணவரை வாடகைக்கு எடுக்கும் பெண்கள்

ஆண்கள் பற்றாக்குறையால் கணவரை வாடகைக்கு எடுக்கும் நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்றால் நம்ப முடிகிறதா?. ஆம், ஐரோப்பா நாடான லாட்வியாவில் இந்த விநோதம் நடக்கிறது. அங்கு 116 பெண்களுக்கு 100 ஆண்கள் மட்டுமே இருக்கின்றனர். அதிலும், பெரும்பாலானவர்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால் இளம் பெண்கள் ‘Husbands for Rent’ முறைக்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இது பற்றி உங்கள் கருத்து என்ன?
News December 8, 2025
₹827 கோடியை Refund செய்த இண்டிகோ!

விமான சேவை ரத்து, தாமதத்தால் நெருக்கடியில் சிக்கியுள்ள இண்டிகோ, டிக்கெட் தொகையை திரும்ப வழங்குவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2 வாரங்களில் சுமார் 9.5 லட்சம் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இண்டிகோ இதுவரை ₹827 கோடி தொகையை திரும்ப வழங்கியுள்ளது. தொலைந்துபோன 9,000 லக்கேஜ்களில், 4,500 பயணிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவற்றை அடுத்த 36 மணி நேரத்தில் வழங்க திட்டமிட்டுள்ளது.


