News August 22, 2024
APPLY: இந்திய அணுசக்தி நிறுவனத்தில் வேலை

இந்திய அணுசக்தி நிறுவனத்தில் 405 இடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் 279 இடங்கள் பராமரிப்பு தொழிற் பழகுநர் அடிப்படையிலானது. எஞ்சிய 126 இடங்கள் எலக்ட்ரீசியன், பிட்டர், வெல்டர் உள்ளிட்டவை ஆகும். இந்த வேலைக்கான விண்ணப்ப பதிவு, இந்திய அணுசக்தி நிறுவன இணைய தளத்தில் இன்று தொடங்கி உள்ளது. வேலைக்கு விண்ணப்பிக்க செப். 11 கடைசி நாள் ஆகும். SHARE IT
Similar News
News November 10, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல் ▶குறள் எண்: 515 ▶குறள்: அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் சிறந்தானென்று ஏவற்பாற் றன்று. ▶பொருள்: செய்யும் வழிமுறைகளை அறிந்து தடை வந்தாலும் செய்யும் திறமை உடையவனிடம் அன்றி . இவன் நம்மவன் (கட்சி, இனம்) என்று எண்ணி, ஒரு செயலை ஒப்படைக்கக்கூடாது.
News November 10, 2025
அண்ணாமலையின் ஃபிட்னஸ்.. வாழ்த்திய PM மோடி

கோவாவில் நடைபெற்ற ‘அயர்ன்மேன் 70.3’ டிரையத்லானை வெற்றிகரமாக நிறைவு செய்த அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யாவை PM மோடி வாழ்த்தியுள்ளார். இதுபோன்ற நிகழ்வுகளில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இவை ‘ஃபிட் இந்தியா’ இயக்கத்திற்கு பெரும் பங்களிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த டிரையத்லானில் 1.8 கி.மீ., நீச்சல், 90 கி.மீ., சைக்கிளிங், 21.1 கி.மீ., ரன்னிங் செய்ய வேண்டும்.
News November 10, 2025
பிற மதத்தவர்களும் RSS-ல் இணையலாம்: மோகன் பகவத்

RSS பதிவு செய்யப்படாததன் காரணத்தை அதன் தலைவர் மோகன் பகவத் விளக்கியுள்ளார். RSS 1925-ல் நிறுவப்பட்டது, எனவே பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் பதிவு செய்ய வேண்டும் என எதிர்பார்பார்ப்பதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்து தர்மம் கூட பதிவு செய்யப்படவில்லை எனவும், கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும், தங்கள் அடையாளத்தை விட்டு, பாரத மாதாவின் குழந்தைகளாக வந்தால் RSS-ல் இணையலாம் என்றும் தெரிவித்துள்ளார்.


