News July 10, 2024
வேலையில்லா பட்டதாரி-3 குறித்த அறிவிப்பா?

பிரபலமான தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் ஹேமா ருக்மணி புதிய பட அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், “எங்கள் நிறுவனம் சார்பாக அடுத்த படத்தினை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஜூலை 12 முதல் மற்றுமொரு வேலையில்லா பட்டதாரியை காணலாம். மிஸ்டர் என அவரை அழைக்கவும்” எனக் குறிப்பிட்டுள்ளார். தனுஷ் நடிக்கிறாரா அல்லது VIP போன்ற படமா எனக் குறிப்பிடமால் பதிவிட்டுள்ளார்.
Similar News
News July 10, 2025
மகிழ்ச்சிக்கு 5 நிமிடங்கள்

தினசரி 5 நிமிடங்கள் ஒதுக்கி இப்பழக்கங்களை கடைப்பிடியுங்கள்: *1 நிமிடம் நிதானமாக சுவாசியுங்கள். அமைதி ஆற்றலை உள்ளிழுத்து, அன்பை வெளியிடுங்கள் *கிடைத்துள்ள ஆசிர்வாதங்களுக்காக நன்றி கூறுங்கள் *நாளை நன்றாகவே இருக்கும் என்று `ஆல் இஸ் வெல்’ சொல்லுங்கள் *கடந்தகால கசப்புகளை போக விடுங்கள், நாளை நமதே *நீங்கள் காணும் ஒவ்வொருவரிடமும் அன்பை வெளிப்படுத்துங்கள்.
News July 10, 2025
2047-க்குள் இந்திய அரசியலில் காங்கிரஸ் இருக்காது: பாஜக

2047-ம் ஆண்டுக்குள் இந்திய அரசியலில் இருந்து காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் துடைத்தெறியப்படும் என்று பாஜக தெரிவித்துள்ளது. மீரட்டில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவரும், உ.பி. துணை முதல்வருமான கேசவ் பிரசாத் மெளரியா, பகுஜன் சமாஜ் கட்சியும் இந்திய அரசியலில் இருந்து துடைத்தெறியப்படும் என்றார். 2027 உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.
News July 10, 2025
இரவில் இடி-மின்னலுடன் மழை: IMD

இன்று (ஜூலை 9) இரவு 1 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்கள் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் IMD கணித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கீழே கமெண்ட் பண்ணுங்க.