News August 7, 2024

மீண்டும் OTT தளத்தில் ‘அன்னபூரணி’

image

நயன்தாரா நடித்த ‘அன்னபூரணி’ திரைப்படம், வெளிநாடுகளில் மட்டும் ஆக. 9ஆம் தேதி முதல் ‘சிம்ப்ளி சவுத்’ ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. கடந்த 2023 டிசம்பரில் வெளியான இப்படத்தில், ராமர் அசைவம் சாப்பிட்டதாக வசனம் இடம்பெற்றதால் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தனது தளத்தில் இருந்து படத்தை நீக்கியது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 14, 2025

பிஹார் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சி அளிக்கிறது: ராகுல்

image

பிஹார் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சி அளிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். MGB கூட்டணிக்கு வாக்களித்த லட்சக்கணக்கான மக்களுக்கு நன்றி என X-ல் அவர் பதிவிட்டுள்ளார். தொடக்கத்தில் இருந்தே நியாயமாக நடக்காத இந்த தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை என்றும், தோல்விக்கான காரணம் ஆராயப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு கடுமையாக முயற்சிப்போம் என்றும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

News November 14, 2025

BREAKING: நடிகர் அஜித்குமார் இணைந்தார்

image

ரிலையன்ஸின் எனர்ஜி ட்ரிங்க் பிராண்டான CAMPA எனர்ஜியுடன்(RCPL) இணைந்திருப்பதை AK ரேஸிங் அணி அறிவித்துள்ளது. அஜித் போட்டோவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட AK ரேஸிங் அணி, இது ஆரம்பம்தான் எனத் தெரிவித்துள்ளது. தங்களது நோக்கத்தை பகிர்ந்து கொண்டதற்கு RCPL-க்கு நன்றி தெரிவிப்பதாகவும், இந்த பார்ட்னர்ஷிப் இந்தியன் மோட்டார் ஸ்போர்ட்டை உலகளவில் எடுத்துச் செல்லும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

News November 14, 2025

புத்திசாலி கிளிகளின் இந்த குணங்கள் தெரியுமா?

image

பூமியில் வாழும் உயிரினங்களில், கிளிகள் மனிதர்களை ஆச்சரியப்படுத்தும் திறன்கள் கொண்டவை. மனிதர்களுடன் நெருக்கமான பந்தம், கிளிகளின் ஆழமான உணர்ச்சி மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவை நம்மை வியப்படைய செய்கிறது. கிளிகள் குறித்து சில அழகான தகவல்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்களுக்கும் கிளிகள் பிடிக்கும் என்றால் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!