News March 28, 2024
இபிஎஸ்சுக்கு அன்புமணி ராமதாஸ் பதிலடி

தேர்தலுக்கு தேர்தல் பாமக அணி மாறுவதாக இபிஎஸ் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிலடி கொடுத்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “தேர்தலின்போது பாமகவை திமுகவும், அதிமுகவும் பயன்படுத்தி கொண்டன. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமகவால்தான், அதிமுக 66 தொகுதிகளில் வென்றது. 36 தொகுதிகளில் பாமக வாக்குவங்கிதான், அதிமுகவுக்கு வெற்றியை தேடித் தந்தது” என்றார்.
Similar News
News January 13, 2026
கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல: டிரம்புக்கு பதிலடி

கிரீன்லாந்தை எப்படியாவது <<18833302>>வாங்கிவிடுவேன்<<>> என கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார் டிரம்ப். இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுத்த டென்மார்க் MEP ஆண்டர்ஸ் விஸ்டிசன், கிரீன்லாந்து 800 ஆண்டுகளாக டென்மார்க்கின் முக்கிய அங்கமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். எனவே, கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என்ற அவர், மேடையிலேயே டிரம்ப்பை “F**k off” என அசிங்கமாகவும் திட்டியுள்ளார்.
News January 13, 2026
இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்திற்குத் தேவையான ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களைப் பதிவிட இப்போதே கீழே உள்ள <
News January 13, 2026
ஸ்டிரைக் அறிவிப்பு.. தமிழக அரசுக்கு புதிய நெருக்கடி

தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்கள், ஊராட்சி செயலாளர்களை தொடர்ந்து, தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்க சத்துணவு ஊழியர்களும் தயாராகி வருகின்றனர். சிறப்பு காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8-ம் தேதி அடையாள போராட்டத்தை நடத்தினர். இந்நிலையில், பொங்கல் விடுமுறை முடிந்தவுடனே ஜன.20-ம் தேதி முதல், வேலை நிறுத்தம் செய்யப்போவதாக சத்துணவு ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.


