News November 18, 2024
தவெகவுடன் கூட்டணியா? அதிமுக விளக்கம்

2026 தேர்தலில் ADMK- TVK கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், ADMKவுக்கு 154, TVKவுக்கு 80 என தொகுதி பங்கீடு செய்ய உள்ளதாகவும் செய்திகள் பரவின. TVK தரப்பு இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்தது. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன், TVKவுடன் கூட்டணி வைப்பதாக எப்போது அறிவித்தோம் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கூட்டணி வைப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார்.
Similar News
News December 10, 2025
சுபகாரியங்களுக்கு வாழை மரம் கட்டுவது ஏன்?

சுபகாரியங்கள் நடைபெறும் இடங்களிலும், கல்யாண வீடுகளிலும் முகப்பு பந்தலில் வாழை மரம் கட்டுவது தமிழர்களின் வழக்கம். அதில் வாழைப்பழ குலையும் தொங்கும். இதற்கான காரணம் தெரியுமா? வாழையடி வாழையாக குலம் தழைத்து வாழவேண்டும் என்ற அடிப்படையில் அவ்வாறு செய்யப்படுகிறது. மேலும், வாழையின் இலை, பூ, காய், கனி என எல்லாமும் பயன்படுவது போல, நாமும் பயனுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது அர்த்தமாகும்.
News December 10, 2025
வார்னிங்: ஆதார் ஜெராக்ஸ் கொடுக்க வேண்டாம்..

ஹோட்டல் ரூம் புக்கிங் உள்பட சில நிறுவனங்கள், ஆதார் நகலை பெற்று சேமித்து வைக்கும் பழக்கத்தை கொண்டுள்ளன. இதனால் தரவுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதாக UIDAI கருதுகிறது. இந்நிலையில், இனி எந்தவொரு இடத்திலும் நீங்கள் ஆதார் அட்டை நகலை கொடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக QR கோட் ஸ்கேனிங், பயோமெட்ரிக் உள்ளிட்ட ஆன்லைன் செயல்பாடுகள் மூலம் ஆதார் சரிபார்க்கப்படும். இந்த செயல்முறை விரைவில் அமலுக்கு வரவுள்ளது.
News December 10, 2025
சர்க்கரை நோயை அதிகரிக்கும் காற்று மாசு!

சிகரெட், மது, எய்ட்ஸ், காசநோய் போன்ற காரணங்களால் இறப்பவர்களை விட, காற்று மாசால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். மாசுபட்ட காற்றில் உள்ள PM 2.5 நுண்துகள்கள், ரத்தத்தில் இன்சுலினை அதிகரித்து, சர்க்கரை நோயை உண்டாக்குகிறதாம். தாய் வயிற்றிலிருக்கும் போதே, கடைசி 3 மாதங்களில் காற்று மாசால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு, பிற்காலத்தில் high BP ஏற்படும் ஆபத்து அதிகமாம்.


