News November 17, 2024
அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில்..!

ZOMATO நிறுவனம் DISTRICT என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. திரைப்பட டிக்கெட் புக்கிங், விளையாட்டு போட்டிகளுக்கான டிக்கெட் புக்கிங், நேரலை நிகழ்வுகள், ஷாப்பிங் மற்றும் தங்குமிடங்களுக்கான புக்கிங் உள்ளிட்ட பல சேவைகளை இந்த ஆப்பில் பெறலாம். மேற்கூறிய சேவைகளை பெற நாம் வெவ்வேறு ஆப்களை பயன்படுத்த வேண்டிய சூழலில், இவை அனைத்தும் ஒரே செயலியில் கிடைக்கும் வகையில் ZOMATO இதை அறிமுகப்படுத்தியுள்ளது.
Similar News
News December 11, 2025
ஆயுதங்களை ஒப்படைத்து 11 நக்சல்கள் சரண்

2026 மார்ச் 31-க்குள் நாட்டில் நக்சல்களை ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், மகாராஷ்டிராவில் நேற்று 11 நக்சல்கள், தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்துள்ளனர். இவர்களை பற்றி தெரிவித்தால் ₹82 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில், லெகமி என்பவர் மீது 43 என்கவுண்டர் உள்பட 88 குற்ற வழக்குகள் உள்ளது.
News December 11, 2025
எனது காதல் இதன் மீது மட்டுமே: ஸ்மிருதி மந்தனா

திருமணம் நிறுத்தப்பட்டதை அடுத்து ஸ்மிருதி மந்தனா முதல்முறையாக டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, கிரிக்கெட்டை தவிர வேறு எதையும் அதிகமாக காதலிக்கவில்லை எனவும், இந்திய அணியின் ஜெர்ஸியை அணிந்ததும் உள்ளுக்குள் பிறக்கும் உத்வேகம் தான் தன்னை ஊக்கப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பிரச்னைகளில் இருந்து வெளியேற இந்த உத்வேகம் தான் தன்னை வழிநடத்துவதாகவும் கூறியுள்ளார்.
News December 11, 2025
அமித்ஷா பதிலில் பதட்டம் தெரிந்தது: ராகுல்

மக்களவையில் வாக்கு திருட்டு குறித்த அமித்ஷாவின் பதிலில் பதட்டம் தெரிந்ததாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பாஜகவினருக்கு பல மாநிலங்களில் வாக்குரிமை இருப்பது பற்றியோ, தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் இருந்து CJI நீக்கியது குறித்தோ அவர் எந்த பதிலையும் அளிக்கவில்லை. CCTV வழங்கப்படாததற்கு அவர் கூறிய காரணம் அபத்தமாக இருந்ததாகவும் ராகுல் விமர்சித்துள்ளார்.


