News November 17, 2024
ALERT: 12 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மழை வெளுக்கப்போகுது. தொடர்ந்து, நவ.23 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.
Similar News
News December 17, 2025
மாணவன் உயிரிழப்பு குறித்து அமைச்சர் விளக்கம்

<<18580609>>திருவள்ளூர்<<>> பள்ளி மாணவன் உயிரிழப்பு தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கமளித்துள்ளார். அதில், பள்ளியில் அஜாக்கிரதையாக செயல்பட்டவர்கள் குற்றம் செய்ததாகத்தான் அர்த்தம் என்று குறிப்பிட்டுள்ளார். FIR பதிவு செய்துள்ளதாக கூறிய அவர், நிதியுதவி மட்டுமின்றி குடும்பத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவித்தார். CM இதுபற்றி விசாரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
News December 17, 2025
520 பெண்களுடன் கணவர்.. மனைவியின் விநோத செயல்!

ஜப்பான் பெண்ணுக்கு, அரிய வகை நோயுடன் மகன் பிறக்க, கணவன் துணையுடன் அதை வெல்ல நினைக்கிறார். அப்போது தான், கணவர் 520 பெண்களுடன் முறை தவறி பழகி வருவது தெரியவருகிறது. முதலில் பழிவாங்க எண்ணினாலும், மகனின் நிலை கண்டு நூதன முடிவை எடுத்தார். கணவனை பிரிந்து, அவரின் முறையற்ற உறவுகளை Comics புக்காக வெளியிட்டுள்ளார். இதன்மூலம் கோபத்தை தணித்து கொண்டது மட்டுமின்றி, மகன் சிகிச்சைக்கும் பணம் சேர்த்துள்ளார்.
News December 17, 2025
தவெகவில் இணைந்தனர்.. கொங்குவில் அடுத்த விக்கெட்

செங்கோட்டையன் வருகைக்கு பிறகு, திமுக, அதிமுகவுக்கு போட்டியாக கொங்கு மண்டலத்தை தவெக வலுப்படுத்தி வருகிறது. இந்நிலையில், அமமுக பொதுக்குழு உறுப்பினர் கோவை நாகு உள்பட அமமுகவினர், புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். ஈரோட்டில் நாளை விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போதும், மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழா நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


