News August 18, 2025
நாடு முழுவதும் முடங்கியது ஏர்டெல் சேவை

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் சேவை நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதால் பயனர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். அழைப்புகளை மேற்கொள்ள முடியாமலும், இணைய சேவை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் 2500+ புகார்கள் ஏர்டெல் இணையத்தளத்தில் பதிவாகியுள்ளன. இந்நிலையில், இடையூறுக்கு மன்னிப்பு கேட்ட ஏர்டெல் நிறுவனம், பிரச்னை விரைவில் சரிசெய்யப்படும் என விளக்கம் அளித்துள்ளது. உங்க சிம் வொர்க் ஆகுதா?
Similar News
News December 16, 2025
₹25.20 கோடி.. கிரீனை தட்டித் தூக்கிய KKR

IPL வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன 3-வது வீரர் என்ற பெருமையை கேமரூன் கிரீன் பெற்றுள்ளார். சென்னையும், கொல்கத்தாவும் அவரை வாங்குவதற்கு மல்லுக்கட்டியதால் அவரது ஏலத்தொகை ₹2 கோடியில் இருந்து ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ₹43.40 கோடி வைத்திருந்த போதிலும், ₹25 கோடிக்கு பிறகு ஏலம் கேட்பதை CSK நிறுத்தியது. இதையடுத்து ₹25.20 கோடிக்கு அவரை KKR ஏலம் எடுத்தது. இதனால் CSK ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.
News December 16, 2025
மில்லரை ₹2 கோடிக்கு வாங்கிய டெல்லி

2026 IPL Auction: தென்னாப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் மில்லரை ₹2 கோடிக்கு டெல்லி அணி வாங்கியுள்ளது. இவரை வாங்க எந்த அணியும் பெரிதாக ஆர்வம் காட்டாததால், அடிப்படை விலைக்கே வாங்கப்பட்டுள்ளார். முன்னதாக பஞ்சாப், குஜராத் என பல அணிகளில் விளையாடியுள்ள மில்லர், கடைசி சீசனில் லக்னோ அணிக்காக விளையாடினார்.
News December 16, 2025
தமிழ் நடிகைக்கு திருமணம் முடிந்தது ❤️❤️❤️

‘செல்லம்மா’ சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா சுரேந்திரன். தற்போது ‘மகளே என் மருமகளே’ என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் தனது காதலரான ரோஹித் என்பவரை கரம் பிடித்துள்ளார். இந்த ஆண்டு ஜனவரியில் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், தற்போது தான் திருமணம் முடிந்துள்ளது. இவர்களின் கியூட் போட்டோஸ் வைரலாகின்றன. சின்னத்திரை நடிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


