News August 22, 2024

விமானப்படையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை.. APPLY

image

இந்திய விமானப்படையில் அக்னிவீர் திட்டத்தின்கீழ் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கூடைபந்து, கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட 20 விளையாட்டு பிரிவுகளில் இந்த ஆட்தேர்வு நடைபெறுகிறது. விண்ணப்பப்பதிவு https://agnipathvayu.cdac.in/casbspm இல் நடைபெறுகிறது. செப். 29ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு பகிரலாமே.

Similar News

News November 14, 2025

புதுவை: அதிநவீன மிதவை கருவி சீரமைப்பு

image

மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய கடலோர ஆராய்ச்சி மையம், கடல் நீரின் தன்மையை அறியும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி புதுவை துறைமுகத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் அதிநவீன கருவிகள் பொருந்திய மிதவைகள் நிறுவப்பட்டுள்ளன. நேற்று அதிகாரிகள் படகில் சென்று, அந்த மிதவை எடுத்து கரைக்கு கொண்டுவந்து பெயிண்ட் அடித்து சேதமடைந்த பகுதியை சீரமைத்தனர்.

News November 14, 2025

VIRAL: ராகுல் காந்தியின் ‘95 தேர்தல் தோல்விகள்’

image

காங்கிரஸின் தோல்வியை கலாய்த்து பாஜக ஐடி விங் வெளியிட்ட X பதிவு வைரலாகி வருகிறது. காங்கிரஸில் முக்கிய தலைவராக ராகுல் உருவெடுத்த 2005 முதல் 2025 வரையான 20 ஆண்டுகளில், அக்கட்சியின் அனைத்து தேர்தல் தோல்விகள் & பின்னடைவுகளை குறிப்பிட்டு, ‘ராகுல் காந்தி! இன்னொரு தேர்தல், இன்னொரு தோல்வி!’ எனக் குறிப்பிட்டு, தேர்தலில் தோற்பதில் இவரது consistency-ஐ யாருமே மிஞ்ச முடியாது என்று கிண்டல் செய்துள்ளது.

News November 14, 2025

BIHAR ELECTION: தேஜ் பிரதாப் யாதவ் தோல்வி

image

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில், லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் தோல்வியடைந்தார். மஹுவா தொகுதியில் தனது ஜன்ஷக்தி ஜனதா தள கட்சியின் சார்பாக போட்டியிட்ட அவர், LJP(R) வேட்பாளர் சஞ்சய் குமாரிடம் 51,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து 3-ம் இடம் பிடித்தார். ஆர்ஜேடி கட்சியின் முகேஷ் ரோஷன் இரண்டாம் இடம் பிடித்தார்.

error: Content is protected !!