News September 3, 2025
2026 தேர்தலில் 4வது இடத்தில் அதிமுக: புகழேந்தி

2026 தேர்தலில் சீமானுடன் EPS போட்டி போட வேண்டியிருக்கும் என புகழேந்தி பேசினார். நெல்லையில் பேசிய அவர், அதிமுக பலமடைந்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும் என்றும் பிரிந்திருந்தால் 4வது இடத்திற்கு தள்ளப்படும் எனவும் தெரிவித்தார். இதே நிலை நீடித்தால் திமுக வெற்றி பெறுவதற்கு EPS காரணமாகி விடுவார் என்று கூறினார். அதிமுகவை ஒருங்கிணைக்க நினைக்கும் சசிகலா வீட்டிலேயே பதுங்கி கொள்வதாக அவர் சாடினார்.
Similar News
News November 15, 2025
சிவகங்கை விபத்து; அதிர்ச்சியூட்டும் தகவல்.!

திருப்புவனம் அருகே, போலீஸ் வாகனம் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தில் டிரைவர் மீது வழக்குப்திவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட போலீஸ் வாகனம் TN23G0787 இன்சூரன்ஸ் கடந்த 11-2-2018 அன்றுடன் நிறைவடைந்துள்ளதும்,
எப்.சி காலாவதியான நிலையிலும் ஓடிக்கொண்டிருந்ததாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News November 15, 2025
5000 ஆண்டுகள் வரலாறு.. இந்த நாடுகள் இவ்வளவு பழசா!

உலகில் பல்வேறு நாகரிகங்கள் தோன்றி மறைந்துவிட்டன. பல நகரங்கள் எழுச்சி அடைந்து, இருந்த இடமே தெரியாமல் வீழ்ச்சியும் அடைந்துவிட்டன. ஆனால், சில நாடுகள் அனைத்தையும் கடந்து, இன்றும் மனித இனத்தின் ஆணிவேராக இருந்து வருகின்றன. அப்படி உலகின் மிக பழமையான நாடுகளின் பட்டியலை கொடுத்துள்ளோம். போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து எந்த நாடு மிகவும் பழமையானது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
News November 15, 2025
தேவநாதன் அதிரடியாக கைது

பணமோசடி வழக்கில் தேவநாதன் யாதவ் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். முதலீட்டாளர்களிடம் ₹500 கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கில் ₹100 கோடி நிபந்தனை தொகை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு சென்னை கோர்ட் ஜாமீன் வழங்கியது. ஆனால், அந்த நிபந்தனையை நிறைவேற்ற தவறியதால் அவரை கைது செய்ய 2 நாள்களுக்கு முன் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், மீண்டும் சென்னை கோர்ட்டில் ஆஜரான நிலையில், அவரை போலீசார் கைது செய்தனர்.


