News February 27, 2025
அதிமுக – தவெக கூட்டணி.. ஆதவ் கொடுத்த ஹிண்ட்!

2026 தேர்தலில் அதிமுக கூட்டணியில் தவெக சேர உள்ளதாக கூறப்படுகிறது. DMK, BJPயை கடுமையாக விமர்சிக்கும் விஜய் அதிமுகவுடன் மென்மையான போக்கையே கடைபிடிக்கிறார். இதனிடையே நேற்று TVK விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, வரும் தேர்தலில் உங்களுக்கு எதிர்க்கட்சி கூட இல்லை, அதில் விஜய் இருப்பார் எனக் கூறியிருந்தார். இது 2011 தேர்தலை போல் என்பதற்கான ஹிண்ட் என பலரும் கருத்து கூறி வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?
Similar News
News February 27, 2025
பாக். எங்களுக்கு பாடம் எடுக்க தகுதியில்லை: இந்தியா

மனித உரிமைகள் விவகாரத்தில் பாக். தங்களுக்கு பாடம் எடுக்க தகுதியில்லை என இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் பாக். குற்றஞ்சாட்டியது. இதற்கு பதிலளித்த இந்தியா, பாக். ராணுவ தீவிரவாதிகள் எழுதிக் கொடுக்கும் பொய்களை பரப்புவது வேதனை அளிப்பதாகவும், அந்நாட்டில் தான் மனித உரிமைகள் மீறல் அதிகம் நடப்பதாகவும் சாடியுள்ளது.
News February 27, 2025
தமிழ்நாடு அரசில் புதிய வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மருத்துவ தேர்வு வாரியம் (TNMRB) Assistant Surgeon பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இளநிலை Dental Surgery படித்த 37 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 47 காலிப் பணியிடங்களுக்கு அடுத்த மாதம் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <
News February 27, 2025
பிரபல நடிகை மிச்செல் டிராக்டன்பெர்க் மர்ம மரணம்

பிரபல ஹாலிவுட் நடிகை மிச்செல் டிராக்டன்பெர்க் (39) தனது வீட்டில் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். 1996இல் வெளிவந்த புகழ்பெற்ற ‘ஹாரியட் தி ஸ்பை’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், பாபி தி வாம்பயர் ஸ்லேயர் (Buffy the Vampire Slayer) சீரிஸ் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். மிச்செல் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.