News August 5, 2024
செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணையை, உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தனக்கு ஜாமின் கிடைக்கக்கூடாது என்பதற்காகவே, விசாரணையை தள்ளிப்போட ED முயல்வதாக, செந்தில்பாலாஜி தரப்பு குற்றஞ்சாட்டியது. ஆனால் இதனை மறுத்த ED தரப்பு, விசாரணை முழு வீச்சில் நடைபெற்று வருவதாக கூறியது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.
Similar News
News January 18, 2026
ரோஹித்தின் 5% ரெக்கார்டு கூட இல்லை..

NZ-க்கு எதிரான முதல் 2 ODI-ல் ரோஹித் சொதப்ப, அவர் சரியாக பயிற்சி எடுக்கவில்லை என இந்திய துணை பயிற்சியாளர் ரயான் டென் டோசேட் விமர்சித்திருந்தார். இந்நிலையில், ரோஹித்தின் கரியர் ரெக்கார்டுகளில் 5%-ஐ கூட ரயான் செய்ததில்லை என இந்திய Ex கிரிக்கெட்டர் மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார். பொதுவெளியில் அணி வீரர் குறித்து இப்படி கருத்து தெரிவிப்பது வீரரை மனதளவில் தளர்வடைய செய்யும் எனவும் அவர் சாடினார்.
News January 18, 2026
அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்

ஸ்டாலின் முன்னிலையில் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். மாவட்ட MGR மன்ற இணை செயலாளர்கள் பிச்சை, M.முத்துராமன், நகர அம்மா பேரவை தலைவர் கண்ணன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர். இதன் பின்னணியில், திமுகவில் ஐக்கியமான அதிமுக Ex அமைச்சர் அன்வர் ராஜா செயல்பட்டுள்ளார்.
News January 18, 2026
அரசு கஜானாவில் போதை பொங்கல்: அருண்ராஜ்

தமிழர்களின் இல்லங்களில் இன்பம் பொங்கியதோ இல்லையோ, அரசின் கஜானாவில் மது விற்பனை பணம் மட்டும் பொங்கி வழிந்துள்ளதாக அருண்ராஜ் விமர்சித்துள்ளார். 4 நாள்களில் ₹900 கோடி வரை மது விற்பனை நடந்துள்ளதாக கூறியுள்ள அவர், ‘மனமகிழ் மன்றங்கள்’ வழியாக கள்ள மது விற்பனை ஆறாக ஓடியதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், கொல்லைப்புறமாக மது விற்பனையை பெருக்குவதுதான் திடாவிட மாடல் ஆட்சியா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.


