News January 12, 2025

நடிகை ஹனிரோஸ் மீண்டும் குற்றச்சாட்டு

image

நடிகை ஹனிரோஸ் அண்மையில் தனக்கு சிலர் தாெந்தரவு அளிப்பதாக தெரிவித்த புகார் குறித்து விசாரித்து தொழிலதிபர் பாபி செம்மனூர் உள்ளிட்டோரை காவல்துறை கைது செய்தது. இந்நிலையில், ஹனிரோஸ் மீண்டும் சமூகவலைதள பக்கத்தில் புதிதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சமூக ஆர்வலர் ராகுல் ஈஸ்வர், தமது ஒழுக்கத்தை சீர்குலைத்து வருவதாகவும், ஆபாசமாக, இரட்டை அர்த்தத்தில் கருத்து வெளியிடுவதாகவும் கூறியுள்ளார்.

Similar News

News November 11, 2025

ஜடேஜா – சஞ்சு மாற்றம் உறுதி!

image

ஜடேஜாவை கொடுத்துவிட்டு RR-யிடம் இருந்து சஞ்சு சாம்சனை CSK வாங்குவது உறுதியாகிவிட்டதாக Cricbuzz தகவல் தெரிவித்துள்ளது. ஜடேஜா மட்டுமில்லாமல் சாம் கரணையும் விட்டுக்கொடுக்க CSK முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு இந்த 3 வீரர்களும் ஒப்புதல் அளித்து, ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

News November 11, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (நவ.11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க..

News November 11, 2025

டெல்லி சம்பவம் பேரதிர்ச்சியை தருகிறது: விஜய்

image

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தவெக தலைவர் விஜய் வேதனை தெரிவித்துள்ளார். விலைமதிப்பற்ற பல உயிர்கள் பறிபோயுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர் கூறியுள்ளார். மேலும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் சீக்கிரம் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!