News October 20, 2025

நடிகர்கள் அடுத்தடுத்து மரணம்.. திரையுலகினர் சோகம்

image

அக்டோபர் மாதம் அடுத்தடுத்த பிரபலங்களின் மறைவால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. கடந்த 9-ம் தேதி வார் பட நடிகர் வரீந்தர் சிங் குமான், 11-ம் தேதி நடிகரும் ஒளிப்பதிவாளருமான பாபு, 15-ம் தேதி பாடகியும் நடிகையுமான பாலசரஸ்வதி ஆகியோர் மரணமடைந்தனர். இவர்களை தொடர்ந்து இன்று ‘முதல் கனவே’ பட இயக்குநரும், நடிகருமான பாலமுருகனும் மரணமடைந்துள்ள செய்தி, தீப ஒளி திருநாளில் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Similar News

News December 11, 2025

இந்தியாவில் ₹3.14 லட்சம் கோடி முதலீடு செய்யும் அமேசான்

image

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என அமேசான் தெரிவித்துள்ளது. இதற்காக ₹3.14 லட்சம் கோடி முதலீடு செய்யவுள்ளதாக அமேசான் அறிவித்துள்ளது. லாஜிஸ்டிக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதால் ஒட்டுமொத்த ஏற்றுமதி 80 பில்லியனாக அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. சிறுதொழில் செய்யும் 1.5 கோடி பேருக்கு AI-ன் பலன்கள் கொண்டு சேர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 10, 2025

ஜூனியர் ஹாக்கி: ஜெர்மனி சாம்பியன்

image

சென்னையில் நடந்த ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் ஜெர்மனி மகுடம் சூடியுள்ளது. இறுதிப்போட்டியில் ஜெர்மனி, ஸ்பெயின் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த மோதலில், இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் ஆட்டம் சமன் ஆனது. இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட பெனால்டி ஷூட் அவுட்டில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, ஜெர்மனி சாம்பியனானது. தொடரை சிறப்பாக நடத்திய TN விளையாட்டுத்துறையை பலரும் பாராட்டுகின்றனர்.

News December 10, 2025

ராசி பலன்கள் (11.12.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!